Asianet News TamilAsianet News Tamil

புதிதாக உருவாக்கப்பட உள்ள 4 மாநகராட்சிகளுடன் இணைய உள்ள பகுதிகள் என்னென்ன? முழு விவரம்..

புதிதாக உருவாக்கப்பட உள்ள காரைக்குடி, திருவண்ணாமலை, புதுக்கோட்டை, நாமக்கல் மாநகராட்சிகளில் சேர்க்கப்பட உள்ள கிராம ஊராட்சிகளின் விவரம் தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

Which areas will be merged with the new four corporations in tamilnadu gazette details
Author
First Published Mar 22, 2024, 3:47 PM IST

தமிழகத்தில் மேலும் 4 புதிய மாநகராட்சிகள் உருவாக்கப்படும் என்று சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. அதன்படி புதிதாக உருவாக்கப்பட உள்ள காரைக்குடி, திருவண்ணாமலை, புதுக்கோட்டை, நாமக்கல் மாநகராட்சிகளில் சேர்க்கப்பட உள்ள கிராம ஊராட்சிகளின் விவரம் தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

காரைக்குடி மாநகராட்சி :

காரைக்குடி மாநகராட்சியில் கண்டனூர், கோட்டையூர் பேரூராட்சிகளும், சங்காபுரம், கோவிலூர், இலுப்பக்குடி, அரியக்குடி, தளக்காவூர் ஆகிய கிராம ஊராட்சிகளை இணைத்து மாநகராட்சி உருவாக்கப்பட உள்ளது.

தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் சொன்ன குட்நியூஸ்!

திருவண்ணாமலை மாநகராட்சி :

திருவண்ணாமலை நகராட்சி உடன் வேங்கிக்கால், சின்னகாங்கேயனூர், கீழ்நாச்சிப்பட்டு, நொச்சிமலை, ஏந்தல், தென் மாத்தூர், கீழ்கசராப்பட்டு, சாவல்பூண்டி, நல்லவன் பாளையம், கனந்தம்பூண்டி, ஆணாய்பிறந்தான், அந்தியந்தால், அடி அண்ணாமலை, தேவனந்தல், ஆடையூர், துர்க்கை நம்மியந்தல், மலப்பாம்பாடி ஆகிய ஊராட்சிகளும், அடி அண்ணாமலை பாதுகாக்கப்பட்ட காடுகள் பகுதிகளையும் இணைத்து புதிய மாநகராட்சி உருவாக்கப்பட உள்ளது. 

புதுக்கோட்டை மாநகராட்சி :

புதுக்கோட்டை நகராட்சியுடன், திருக்கட்டளை, திருமலைராய சமுத்திரம், கவிநாடு கிழக்கு, கவிநாடு மேற்கு, தேக்காட்டூர், 9ஏநந்தம்பண்ணை, 9பி நந்தம்பண்ணை, வெள்ளனூர், திருவேங்கைவாசல், வாகவாசல், முள்ளூர் கிராம ஊராட்சிகள், கஸ்பா காடுகள் மேற்கு பகுதி ஆகியவற்றை இணைத்து புதுக்கோட்டை மாநகராட்சி உருவாக்கப்பட உள்ளது.

24 மாநிலங்கள்.. சென்னையில் உருவாகும் புது வந்தே பாரத் ரயில்கள்.. மணிக்கு 200 கிமீ வேகம்..

நாமக்கல் மாநகராட்சி :

நாமக்கல் நகராட்சி உடன் வகுரம்பட்டி, வள்ளிப்புரம், ரெட்டிப்பட்டி, வீசாணம், பாப்பிநாயக்கன்பட்டி, சலுவம்பட்டி, தொட்டிப்படி, வசந்தபுரம், வேட்டம்பாடி, மசூர்பாடி, லத்துவாடி, காதப்பள்ளி ஆகிய கிராம ஊராட்சிகளை இணைத்து நாமக்கல் மாநகராட்சி உருவாக்கப்பட உள்ளது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios