ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் தொடங்க வாய்ப்புள்ளது வைகோ ஆவேசமாக கூறினார்.

தூத்துக்குடியில் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த பிரணாப் முகர்ஜிக்கு எதிராக கருப்பு கொடி கட்டிய வழக்கில் தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜராக வந்த வைகோ செய்தியாளர்களை சந்தித்தார்.

பிரணாப் முகர்ஜி ராணுவ அமைச்சராக இருந்தபோது அவருக்கு கருப்புக் கொடி காட்டிய வழக்கில்  இன்று (6-7-18) மதியம் 1.45 மணிக்கு தூத்துக்குடி இரண்டாவது ஜுடிஷியல் நீதிமன்றத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆஜராக வந்தார்.

அப்போது ஸ்டெர்லைட் ஆலையை மூட சட்டமன்றத்தில் கொள்கை முடிவு எடுக்காதவரை  தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் இந்த ஆலைக்கு எதிரான வழக்கில் சரியான தீர்ப்பு கிடைக்காது என குறிப்பிட்டு உள்ளார்.

கோர்ட்டில் ஆஜராகி 15 நிமிடம் கழிந்து வெளியே வந்த போது வழக்கறிஞர்கள் சங்கத்தின் முன்பு இருந்த சில வழக்குறைஞர்கள் வைகோவிற்கு எதிராக கோஷம் எழுப்பி உள்ளனர்.இதனால் தூத்துக்குடி நீதிமன்ற வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சென்ற வைகோ, மத்திய சிறைச்சாலையில் இருக்கும் போராளி முகிலனை சந்திக்க திட்டமிட்டு உள்ளதாக தெரிகிறது.