விருதுநகரில் நடைபெற்ற மதிமுக கூட்டத்தில் கட்சித் தொண்டர்கள் வெளியேறியதை செய்தியாளர்கள் படம் பிடித்ததால், வைகோ ஆத்திரமடைந்து செய்தியாளர்களை தாக்க உத்தரவிட்டார்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் தனியார் திருமண மண்டபத்தில் நெல்லை மண்டல மதிமுகவின் ஆலோசனை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அரங்கம் நிறைந்து காணப்பட்ட இந்த கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பேசிக்கொண்டிருந்தார். அவரது உரையைக் கேட்காமல் கட்சித் தொண்டர்கள் ஒவ்வொருவராக அடுத்தடுத்து வெளியேறினர். இதனால் பாதி நாற்காலிக்கு மேல் காலியாக இருந்தது.
மதிமுக ஆலோசனை கூட்டம்
அப்போது வைகோ எங்கே எழுந்து செல்கிறீர்கள் தொண்டர்களை உள்ளே வந்து அமரும்படியும் கூறியுள்ளார். ஆனால், தொண்டர்கள் இதை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் வெளியேறினர். இதனையடுத்து வைகோ பேச்சை பாதியில் நிறுத்தி விட்டு அமர்ந்துக்கொண்டார். அப்போது தொண்டர்கள் வெளியேறிய காட்சியையும் காலியான இருக்கைகளையும் செய்தியாளர்கள் படம் பிடிப்பதை கண்டதும் ஆவேசமாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்கள் தகாதா வார்த்தையால் திட்டியது மட்டுமல்லாமல் கையில் உள்ள கேமராவை பறிமுதல் செய்யுமாறு கூறினார். இதனையடுத்து மது போதையில் இருந்த தொண்டர்கள் செய்தியாளர்கள் மீது சரமரியாக தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த தாக்குதலில் பத்திரிகையாளர்கள் பலர் காயமடைந்துள்ளனர். இதனால் அங்கு பதற்றமான சூழல் உருவானது. பின்னர் மதிமுக தொண்டர்களிடமிருந்து காவல்துறையினர் செய்தியாளர்களை பத்திரமாக வெளியே மீட்டனர்.
மதிமுக தொண்டர்கள் பத்திரிக்கையாளர் மீது தாக்குதல்
வைகோ அவர்களின் இந்த செயலையும், பத்திரிகையாளர்களை தாக்கிய மதிமுக தொண்டர்களையும் சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாக கண்டனம் தெரிவித்துள்ளது. அதாவது பழுத்த அரசியல் அனுபவம் உள்ள மதிமுக கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ ஆலோசனைக் கூட்டத்தில் மிரட்டல் தோனியில் நடந்து கொண்டதுக்கு தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. சம்பவத்துக்கு வைகோ அவர்கள் உடனடியாக வருத்தத்தை தெரிவிக்க வேண்டும் பாதிக்கப்பட்ட பத்திரிக்கையாளர்களை நேரில் அழைத்து சம்பவத்துக்கு வருத்தத்தை தெரிவிக்க வேண்டும். ரவுடிகள் போல் நடந்து கொண்ட மதிமுகதொண்டர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட பத்திரிக்கையாளர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றுகேட்டுக்கொள்கிறோம்.
வன்முறையை கட்டவிழ்த்துவிட்ட வைகோ
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில், நெல்லை மண்டல மதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டு நீண்ட நெடிய உரையாற்றினார். ஆனால் அவரது உரையைக் கேட்காமல் கட்சித் தொண்டர்கள் வெளியேறத் தொடங்கினர். இந்த காட்சியையும் காலியான இருக்கைகளையும் செய்தியாளர்கள் படம் பிடித்தனர். தங்கள் கட்சியின் மானம் கப்பலேறிவிடும் என்ற ஆத்திரத்தில் , மூத்த அரசியல் வாதி என்பதையும் மறந்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, அவர்கள் அந்த செய்தியாளர்களை வெளியேற்றுமாறு உத்தரவிட்டார். மேலும் கையில் உள்ள கேமராவை பறிமுதல் செய்யுமாறு கூறினார். இதைக் கேட்டு மதியிழந்து மது போதையில் இருந்ததாக கூறப்படும் அவரது கட்சி தொண்டர்கள் செய்தியாளர்கள் மீது சரமரியாக தாக்குதலில் ஈடுபட்டனர். தந்தி டிவி, தமிழ் ஜனம் உள்ளிட்ட பல செய்தியாளர்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் தமிழ் ஜனம் செய்தியாளருக்கு தலையில் காயம் ஏற்பட்டு முன் பகுதியில் வீக்கம் ஏற்பட்டுள்ளது. தாக்குதல் நடத்திய நபர்களிடமிருந்து செய்தியாளர்களை போலீஸார் காப்பாற்றி அனுப்பி வைத்துள்ளனர்.காவல்துறையினர் முன்னிலையிலே செய்தி சேகரிக்க சென்ற சென்ற செய்தியாளர்கள் தாக்கப்பட்டு இருப்பது, செய்தியாளர்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ளது.
தென்னிந்திய பத்திரிகையாளர்கள் யூனியன்
மிகுந்த அரசியல் அனுபவம் கொண்ட வைகோ அவர்களே இத்தகைய மோசமான மனப்பாங்கை வெளிப்படுத்தியிருப்பதை கண்டிப்பதுடன், வைகோ உள்ளிட்ட தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது உடனடியாக வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்கும்படியும், வைகோ பகிரங்க மன்னிப்பு கேட்கும்படியும் தென்னிந்திய பத்திரிக்கையாளர்கள் யூனியன் சார்பில் வலியுறுத்துகிறோம். எப்பொழுதும் போல அரசு மவுனம் காக்காமல் காவல்துறைக்கு தக்க நடவடிக்கை எடுக்கவும், மீண்டும் இதுபோல நடக்காமல் பத்திரிகையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் என தென்னிந்திய பத்திரிகையாளர்கள் யூனியன் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
