Asianet News TamilAsianet News Tamil

காவிரி நீரில் அடித்து செல்லப்பட்ட இளைஞர்கள்… விருந்துக்கு வந்தபோது நேர்ந்த சோகம்!!

கரூர் அருகே நண்பர் வீட்டுக்கு விருந்துக்கு வந்த இளைஞர்கள் காவிரி நீரால் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

two youth drowned in cauvery river near karur
Author
Karur, First Published Aug 16, 2022, 4:49 PM IST

கரூர் அருகே நண்பர் வீட்டுக்கு விருந்துக்கு வந்த இளைஞர்கள் காவிரி நீரால் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே  குளத்தூரை சேர்ந்தவர் திவாகர். 25 வயதான இவர், வாங்கல் கடம்பக்குறிச்சி அருகே உள்ள தனது குலதெய்வமான பவுலியம்மன் கோவிலில் கிடா வெட்டு விருந்து வைத்திருந்தார். இதில் திவாகரனின் நண்பரான கோவை தொண்டாமுத்தூர் பகுதியை சேர்ந்த ஐடி நிறுவன ஊழியர் விஷ்ணு, கோவை மாவட்டம் ஒண்டிப்புதூர் சேர்ந்த ஆதர்ஷ் மற்றும் அவர்கள் நண்பர்களான கோவையைச் சேர்ந்த சங்கர், நவீன் குமார், அஜித் உள்ளிட்ட ஐந்து பேர் நேற்று கிடா வெட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள காலையில் கடம்பக்குறிச்சி வந்தனர்.

இதையும் படிங்க: வைகை ஆற்றில் தொடரும் உயிரிழப்பு...! ஒரே வாரத்தில் 9 பேர் பலி... அதிர்ச்சியில் பொதுமக்கள்

இவர்கள் நேற்று மதிய உணவை முடித்துவிட்டு குளிப்பதற்காக கடம்பன்குறிச்சி பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் ஐந்து நபர்கள் சென்றுள்ளனர். காவிரி ஆற்றில் வெள்ளம் இரு கரைகளையும் தொட்டு வினாடிக்கு 80 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டு உள்ளது. ஆற்றில் தற்போது அதிகப்படியான தண்ணீர் செல்லும் நிலையில் ஆழமான பகுதியில் முதலில் இறங்கிய ஆதர்ஷை தண்ணீர் இழுத்துச் சென்றதை கண்ட விஷ்ணு அவரைக் காப்பாற்ற ஆற்றுக்குள் இறங்கிய போது அவரும் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார். இதனால் பதட்டமடைந்த அவரது நண்பர்களான சங்கர், நவீன் குமார், அஜித் ஆகியோர் மற்ற உறவினர் இணைந்து வேலாயுதம் பாளையம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.

இதையும் படிங்க: கோயில் திருவிழா நடத்த காவல் துறை அனுமதி அவசியம் இல்லை - உயர்நீதிமன்ற மதுரைக் கிளை பரபரப்பு உத்தரவு

தகவலை பெற்ற தீயணைப்பு நிலைய அலுவலர் திருமுருகன் தலைமையிலான தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காவிரி ஆற்றுக்குள் இறங்கி மாயமான இரண்டு பேரை பைப்பர் படத்தின் மூலம் தேடினர். இரவு நேரம் ஆனதால் தேடும்படி நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் இன்று மீண்டும் தேடுதல் பணி தொடங்கியுள்ளது. இதுகுறித்து வாங்கல் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து நீரில் மூழ்கிய கோவையைச் சேர்ந்த ஐடி ஊழியர்களின் விரிவான தகவலை சேகரித்து வருகின்றனர். கரூர் கடங்குறிச்சி பகுதியில் கிடா வெட்டுக்கு வந்த கோவையைச் சேர்ந்த ஐந்து இளைஞர்களின் இரண்டு இளைஞர்கள் காவிரி நீரால் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அவர்களின் இரண்டாவது நாளாக தேடும் பணியில் தீயணைப்பு படை வீரர்கள் ஈடுபட்டுள்ளதால் அவரது உறவினர்கள் மிகுந்த சோகத்தில் உள்ளனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios