Asianet News TamilAsianet News Tamil

கோயில் திருவிழா நடத்த காவல் துறை அனுமதி அவசியம் இல்லை - உயர்நீதிமன்ற மதுரைக் கிளை பரபரப்பு உத்தரவு

கோவில் திருவிழாக்களில் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் வாய்பிருந்தாலோ, ஸ்பீக்கர்கள் வைக்க, ஆடல் பாடல் நிகழ்ச்சிகளுக்கு  காவல்துறையினரிடம் அனுமதி பெற்றால் போதும் என மதுரை நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
 

The Madurai High Court branch has ordered that the permission of the police department is not necessary to hold the temple festival
Author
Madurai, First Published Aug 16, 2022, 1:50 PM IST

கோயில் திருவிழாவும் போலீஸ் அனுமதியும்

கோயில் திருவிழா என்றாலை பொதுமக்கள் குடும்பம், குடும்பமாக கலந்து கொள்வார்கள், தங்களது உறவினர்களை சந்தித்து ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியை வெளிப்படுத்திக்கொள்வார்கள். அப்படி உற்சகமாக நடைபெறும் திருவிழாவில் முன் விரோத மோதல்களும் ஏற்படும், மேலும் யாருக்கு முதல் மரியாதை என்பதில் விரோதம் ஏற்பட்டு வெட்டு குத்து கூட ஏற்படும். எனவே கோயில் திருவிழாவில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக போலீஸ் அனுமதி பெற வேண்டும் என தமிழக அரசு ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், கோயில் திருவிழா தொடர்பாக மதுரை உயர்நீதிமன்ற கிளை வழங்கிய தீர்ப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த சீனி என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். அதில், "விருதுநகர் மாவட்டம், வலையப்பட்டி கிராமத்தில் உள்ள பட்டு அரசி அம்மன் கோயில் திருவிழா பல ஆண்டுகளாக எந்த பிரச்சனையுமின்றி சுமுகமாக நடத்தப்பட்டு வருகிறது. 

பல மணி நேரமாக உயிருக்கு போராடும் யானை..! சிகிச்சை அளிப்பது யார்? குழப்பத்தில் தமிழக - கேரளா வனத்துறையினர்

திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலில் ஆவணி திருவிழா.. நாளை மறுநாள் கொடியேற்றத்துடன் தொடக்கம்.!

The Madurai High Court branch has ordered that the permission of the police department is not necessary to hold the temple festival

காவல்துறை அனுமதி தேவையில்லை

இந்த ஆண்டு கோவில் பொங்கல் திருவிழாவை ஆகஸ்ட் 19 முதல்  20 வரை நடத்துவதற்கு திட்டமிட்டு,  காவல்துறையிடம் அனுமதி கோரினோம்.  இதுவரை எந்தவிதமான பதிலும் தெரிவிக்கப்படவில்லை.  எனவே, திருவிழா நடத்துவதற்கு உரிய அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும்." என  கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், " கிராமங்களில் கோயில் திருவிழா நடத்துவது தொடர்பாக காவல்துறையினரிடம் அனுமதி பெற வேண்டும் என்ற அவசியம் இல்லை. கோவில் திருவிழாக்களில் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் வாய்பிருந்தாலோ, ஸ்பீக்கர்கள் வைக்க, ஆடல் பாடல் நிகழ்ச்சிகளுக்கு  காவல்துறையினரிடம் முறையாக அனுமதி பெற்றால் போதும். இந்த வழக்கை பொறுத்தவரை கிராம மக்கள் அனைவரும் திருவிழா நடத்துவதற்கு ஒத்துழைப்பு தருகின்றனர். எனவே, சட்ட ஒழங்கு பிரச்சனை ஏற்படுவதற்கான வாய்ப்பு இல்லை" எனக் கூறி திருவிழா நடத்துவதற்கு அனுமதி வழங்கி வழக்கினை முடித்து வைத்து உத்தரவிட்டார்.

இதையும் படியுங்கள்

விரைவில் தமிழக முழுவதும் சுற்றுப்பயணம்...! தொண்டர்கள் இதை செய்ய வேண்டாம்.. சசிகலா திடீர் உத்தரவு

 

Follow Us:
Download App:
  • android
  • ios