விரைவில் தமிழக முழுவதும் சுற்றுப்பயணம்...! தொண்டர்கள் இதை செய்ய வேண்டாம்.. சசிகலா திடீர் உத்தரவு

தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் வர இருக்கிறேன், நீங்கள் இருக்கும் இடத்திற்கே வந்து உங்களையெல்லாம் நான் காண இருக்கிறேன். உங்களோடு நேரில் உரையாட இருக்கிறேன். என சசிகலா தனது தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
 

Sasikala has said that she plans to tour across Tamil Nadu to meet volunteers

தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம்- சசிகலா

அதிமுகவில் ஓபிஎஸ்- இபிஎஸ் என பிளவு பட்டுள்ளநிலையில் விரைவில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக சசிகலா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  புரட்சித்தலைவரின் ரத்தத்தின் ரத்தமான, புரட்சித்தலைவியின் வழிவந்த சிங்கங்களான, என் உயிரினும் மேலான எனதருமை கழக உடன்பிறப்புகளுக்கு ஒரு அன்பான வேண்டுகோள். எனது பிறந்த நாளன்று, சென்னையில் உள்ள இல்லத்தில் என்னை நேரில் வந்து சந்திக்க விரும்புவதாக தொடர்ந்து கோரிக்கை வருவதை அறிந்துகொண்டேன் உங்களுடைய அன்புக்கு நான் என்றைக்குமே அடிமை, உங்களுடைய அன்பும், ஆதரவும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் அளிக்கிறது.அதே சமயத்தில், நான் விரைவில் உங்களையெல்லாம் நேரில் வந்து சந்திக்க, தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் வர இருக்கிறேன் நீங்கள் இருக்கும் இடத்திற்கே வந்து உங்களையெல்லாம் நான் காண இருக்கிறேன். உங்களோடு நேரில் உரையாட இருக்கிறேன். ஆகையால், தற்சமயம் எனது பிறத்தநாளுக்காக, நீங்கள் சிரமப்பட்டு, பயணித்து எனது இல்லம் வருவதை தவிர்த்துவிட்டு, தாங்கள் இருக்கும் பகுதியிலேயே உங்கள் கண்முன்னே இருக்கும் ஏழை எளிய சாமானிய மக்களுக்கு, உங்களால் இயன்ற அளவில் நீங்கள் செய்கின்ற உதவிகளை செய்திய வேண்டும்.

ஆளுநருக்கு போட்டியாக துணைவேந்தர் மாநாடு..! திடீரென ஒத்திவைத்த முதலமைச்சர்.. என்ன காரணம் தெரியுமா..?

எனக்கு வாய் நீளமா குறைவா என்பது பிறகு தெரியும்... ஜெயக்குமாரை அலறவிட்ட மா.சுப்பிரமணியன்

Sasikala has said that she plans to tour across Tamil Nadu to meet volunteers

விரைவில் ஒளிமயமான எதிர்காலம்

இதுவே  எனக்கு நீங்கள் அளிக்கின்ற, சிறந்த பிறந்ததால் பரிசாக, மனதார ஏற்றுக்கொள்கிறேன். அதுவே, மறைந்த நம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் எனக்கு அளிக்கும் பிறந்தநாள் பரிசாகவும் எண்ணுகிறேன். என் உயிரினும் மேலான கழகத் தொண்டர்களே, பொறுமையோடு இருங்கள். ஒளிமயமான எதிர்காலம் நம் முன்னே தமக்காகவே காத்துகொண்டு இருக்கிறது. அதாவது "நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி இந்த நாடே இருக்குது தம்பீ என்று நம் பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் அவர்கள் பாடியது போன்று, இந்த மண் நம்மை போன்ற நல்லவர்களை, உண்மையானவர்களை, உறுதியானவர்களை, மக்களின் நம்பிக்கைக்கு பாத்திரமானவர்களை எதிர்பார்த்துதான் இன்றைக்கும் காத்து கொண்டு இருக்கிறது. ஆகவே, மண்ணை நேசிப்போம். மக்கள் நலப்பணிகளை தொடர்ந்து மேற்கொள்வோம் என அந்த கடிதத்தில் சசிகலா தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்

மாணவர்களுக்கு இனி Home Work இல்லை...! எந்த எந்த வகுப்புக்கு தெரியுமா..? பள்ளிகல்வித்துறை அதிரடி உத்தரவு

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios