எனக்கு வாய் நீளமா குறைவா என்பது பிறகு தெரியும்... ஜெயக்குமாரை அலறவிட்ட மா.சுப்பிரமணியன்
ஆந்திராவில் 6,500 ஏக்கரில் கஞ்சா உற்பத்தி செய்வதை கண்டறிந்து, தென் மாநில டி.ஜி.பி.,க்கள் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டதையடுத்து, 4,000 கோடி ரூபாய் மதிப்புள்ள கஞ்சா செடிகளை ஆந்திர அரசு உடனே அழித்தது. இதுபோன்று அ.தி.மு.க., ஆட்சியில் செய்யப்படவில்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை
சென்னை, வளசரவாக்கம் மண்டலத்தில், வளசரவாக்கம் மற்றும் ராமாபுரம் பகுதிகளை இணைக்கும் வள்ளுவர் சாலையில், 20 கோடி ரூபாய் செலவில் மழை நீர் வடிகால் அமைக்க, அமைச்சர் சுப்பிரமணியன் தலைமையில் நேற்று பூஜை போடப்பட்டது. சென்னையில் பருவ மழையின்போது கடந்த ஆண்டு ஏற்பட்ட பாதிப்புபோல இந்த ஆண்டும் பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக பல்வேறு துறைகள் இணைந்து மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடைபெறுகிறது. வளசரவாக்கத்தில் இருந்து ராயபுரம் வழியாக கால்வாய் ஒன்று 2 கிலோமீட்டர் நீளத்துக்கு நெடுஞ்சாலைத்துறை சார்பாக கட்டும் பணி தற்போது தொடங்கப்பட்டுள்ளது. இதனால், இப்பகுதி மக்கள் பெரிதும் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
பதவிக்கு பயத்தில் மூவண்ணக் கொடியை கையில் எடுத்திருக்கிறீர்கள்… மு.க.ஸ்டாலினை சாடிய அண்ணாமலை!!
குட்காவும் அதிமுக அரசு நடவடிக்கையும்
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், கடந்த 9 ஆண்டில் கஞ்சா, குட்கா உள்ளிட்ட பொருட்கள் விவகாரத்தில் எத்தனை பேர் மீது நடவடிக்கை எடுத்து இருக்கிறார்கள் என்று எடப்பாடி பழனிசாமிக்கு தெரியும், அவருக்கு தைரியம் இருந்தால் தெரிவிக்கட்டும். திமுக ஆட்சி அமைத்து கடந்த 15 மாதத்தில் அதைவிட நாங்கள் அதிகமான வழக்கு பதிவு செய்து, போதை பொருட்களை பறிமுதல் செய்திருக்கிறோம். இதுகுறித்து அறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது. நான் வெளியிட்டதில் தவறான விவரங்கள் இருந்தால் அவரே அதிமுக ஆட்சியில் கைப்பற்றப்பட்ட விவரம் குறித்து தகவல் தெரிவிக்கட்டும் என கூறினார். மேலும் அதிமுக ஆட்சியில் குட்கா அதிகளவு கிடைப்பதாக சட்டமன்றத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டவர்கள் புகார் தெரிவித்தோம் ஆனால் குட்கா மீது நடவடிக்கை எடுக்காமல், குட்கா தாராளமாக கிடைக்கிறது எனக்கூறிய திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் 21 பேர் மீது அதிமுக அரசு நடவடிக்கை எடுத்ததாக தெரிவித்தார். ஆனால் திமுக அரசு போதைப்பொருட்களை தடை செய்ய தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
அதிமுகவுடன் டி.டிவி.தினகரன் கட்சி கூட்டணியா? கடம்பூர் ராஜூ பரபரப்பு தகவல்..!
யாருக்கு வாய் நீளம்
தமிழகத்தில் கஞ்சா உற்பத்தி 100 சதவீதம் தடைசெய்யப்பட்டுள்ளது என காவல் துறையினர் தெரிவிக்கின்றனர்.ஆனால் ஆந்திரா, கேரளா, தெலுங்கானா போன்ற மாநிலங்களில் இருந்து வருகிறது. குறிப்பாக, ஆந்திராவில் இருந்து அதிகம் வருவதால், தமிழக போலீசார், அம்மாநிலத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். அதில், 6,500 ஏக்கரில் கஞ்சா உற்பத்தி செய்வதை கண்டறிந்து, தென் மாநில டி.ஜி.பி.,க்கள் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.ஆந்திர அரசு உடனே, 4,000 கோடி ரூபாய் மதிப்புள்ள கஞ்சா செடிகளை அழித்தது. இதுபோன்று அ.தி.மு.க., ஆட்சியில் செய்யப்படவில்லை என கூறினார். எனக்கு வாய் நீளம் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறுகிறார். எனக்கு வாய் நீளமா அல்லது குறைவா என பின்னர் தெரியவரும் என மா.சுப்பிரமணியன் விமர்சித்தார்.
இதையும் படியுங்கள்
உங்களுக்கு ஒரு நியாயம்...! ஊருக்கு ஒரு நியாயமா..? ஸ்டாலின் அரசு மீது பொங்கி எழுந்த அண்ணாமலை