ஆட்சி அதிகாரத்தில் பங்கு தருபவர்களுடன் அமமுக கூட்டணி அமைக்கும் என தஞ்சையில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

அம்மா மக்கள் முன்னெற்ற கழகத்தின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் தஞ்சையில் இன்று நடைபெற்றது. இந்த பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தில், 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி தொடர்பாக முடிவெடுக்க பொதுச் செயலாளர் தினகரனுக்கு முழு அதிகாரம் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் திருப்பரங்குன்றத்தில் ஒருவருக்கொருவர் உறவினர்களாகவோ ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகின்றனர்.

அப்படிப்பட்ட பொது அமைதி, மத நல்லிக்கிணத்திற்கு இடையூறு உருவாக்கும் எந்த அமைப்பையும், கட்சியையும் அமமுக அங்கீகரிக்காது. ஜாதி, மதம், கடவுள் பெயரில் பிரிவினையை உருவாக்கும் அரசியல் தமிழகத்தில் ஒருபோதும் எடுபடாது என தீர்மானம் நிறைவெற்றப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பொக்குழுவில் கலந்து கொண்டு பேசிய கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், “சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களை விட நமக்கு லட்சியம் தான் முக்கியம். வரக்கூடய சட்டமன்ற தேர்தலில் அமமுக இடம்பெறும் கூட்டணியே ஆட்சிக்கு வரும். தமிழகத்தின் நலனுக்காக பாடுபடும், ஊழலற்ற ஆட்சியை உருவாக்க துணை நிற்போம்.

75 ஆண்டுகால கட்சிக்கு சளைக்காமல் கட்டமைப்பை உருவாக்கி வைத்திருக்கும் இயக்கம் அமமுக. 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி குறித்து அமமுகவினர் கவலைப்பட வேண்டாம். எந்த கூட்டணியாக இருந்தாலும் அமமுக கௌரவமான எண்ணிக்கையில் தொகுதிகளைப் பெறும். தேர்தலில் அரசியல் எதிரி, துரோகி பெரிதல்ல, வெற்றி ஒன்றே குறிக்கோள்.

வரக்கூடிய தேர்தலில் நாம் கை காட்டுபவர் தான் தமிழ்நாட்டின் முதல்வராக வரமுடியும். அமமுக உறுதியாக சட்டமன்றத்திற்கு ஆளுங்கட்சியாக செல்ல இருக்கிறது. கூட்டணி ஆட்சியில் இடம் பெற உள்ளவர்கள் மேடையில் மட்டுமல்ல கீழேயும் அமர்ந்துள்ளீர்கள். வரக்கூடிய தேர்தலில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கொடுப்பவர்களுடன் மட்டம் தான் கூட்டணி அமைக்கப்படும். தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைப்போம். அதில் அமமுகவைச் சேர்ந்தவர்கள் உறுதியாக அமைச்சர்களாக இடம்பெறுவார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

அதிகாரத்தில் பங்கு தருபவர்களுடன் மட்டுமே கூட்டணி என தினகரன் தெரிவித்துள்ள நிலையில், தமிழகத்தில் தவெக மட்டுமே அதிகாரத்தில் பங்கு வழங்குவோமென அறிவித்துள்ளது. மேலும் டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் தவெக கூட்டணிக்கு வருவார்கள் என செங்கோட்டையன் அடிக்கடி தெரிவித்து வந்த நிலையில், அதே குரலில் தினகரனும் பேசியிருப்பதால், இரு கட்சிகளும் கூட்டணி அமைக்க தயாராகி விட்டதோ என்ற கருத்தை உருவாக்கி உள்ளது.