தமிழகத்தில் 5 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழ்நாடு அரசின் அதிரடிக்கு காரணம் என்ன?
தமிழகத்தில் 5 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் அவர்களில் 2 அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கியும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அதிகாரிகள் இடமாற்றம் தொடர்பாக தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “பொள்ளாச்சி துணை பிரிவு உதவி ஆணையராக இருந்த பிருந்தாவுக்கு எஸ்.பி.ஆக பதவி உயர்வு அளிக்கப்பட்டு சேலம் மாநகர வடக்கு மண்டல துணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்களம் துணை பிரிவின் உதவி கண்காணிப்பாளராக இருந்த ஐமான் ஜமால் ஐபிஎஸ், எஸ்.பி-ஆக பதவி உயர்வு அளிக்கப்பட்டு ஆவடி துணை ஆணையாராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். சேலம் மாநகர வடக்கு மண்டலத்தின் துணை ஆணையராக இருந்த கௌதம் கோயல் ஐபிஎஸ், பள்ளிக்கரணை துணை ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
மேலும், “ஆவடி சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் என்.பாஸ்கரன் ஐபிஎஸ், மதுரையில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் படையின் 6ஆவது பெட்டாலியன் கமெண்டட் ஆக இடமாற்றம். சென்னை ரயில்வே காவல் எஸ்.பியாக சுகுணா சிங் நியனம் செய்யப்பட்டுள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரயிலில் பயணம் செய்யும் போது மதுபானத்தை எடுத்து செல்லலாமா.? ரயில்வே வெளியிட்ட புது விதிகள்..