Tamilnadu rain: 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு
Tamilnadu rain: இன்று தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘ மேற்குதிசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களான நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, விருதுநகர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இதையும் படிங்க : MGR : ஒற்றை தலைமை விவகாரம் - அன்றே கணித்த எம்.ஜி.ஆர்.. தீர்வு இதுதான் !!
இதையும் படிங்க : AIADMK: எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட 4 பேர் அதிமுகவில் நீக்கம்..இபிஎஸ் தரப்புக்கு திகில் காட்டிய ஓபிஎஸ் தரப்பு
நாளை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரக்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : AIADMK: எடப்பாடி பழனிசாமி அணிக்கு தாவும் வைத்திலிங்கம்? ஓபிஎஸ் அதிர்ச்சி !