AIADMK: எடப்பாடி பழனிசாமி அணிக்கு தாவும் வைத்திலிங்கம்? ஓபிஎஸ் அதிர்ச்சி !
AIADMK : மனோஜ் பாண்டியன், வெல்லமண்டி நடராஜன், வைத்திலிங்கம் உள்ளிட்ட குறிப்பிட்ட சிலர் மட்டுமே ஓ.பன்னீர் செல்வம் தரப்புக்கு ஆதரவாக உள்ளனர்.
இபிஎஸ் Vs ஓபிஎஸ்
சென்னையில் அதிமுக பொதுக்குழு கடந்த 23-ந் தேதி வரலாறு காணாத குழப்பங்கள், வன்முறைகளுடன் முடிவடைந்தது. அதிமுகவின் 50 ஆண்டு கால வரலாற்றில் 30 நிமிடத்தில் முடித்து வைக்கப்பட்ட முதல் பொதுக்குழு இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
கட்சியின் தீர்மானக் குழு உருவாக்கிய தீர்மானங்களையே பொதுக்குழு ஒட்டுமொத்தமாக நிராகரித்த வினோத சம்பவமும் நடந்தது இந்த பொதுக்குழுவில்தான். காரணம் ஒற்றை தலைமை என்ற கோஷம்தான். பெரும் பரபரப்புக்கு மத்தியில் நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் தமிழ்மகன் உசேன் புதிய அவைத்தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார். அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களும் ஒற்றைத் தலைமையை விரும்புவதாக அடுத்தடுத்து பேசியவர்கள் கூறினர்.
எடப்பாடி போட்ட ஸ்கெட்ச்
மனோஜ் பாண்டியன், வெல்லமண்டி நடராஜன், வைத்திலிங்கம் உள்ளிட்ட குறிப்பிட்ட சிலர் மட்டுமே ஓ.பன்னீர் செல்வம் தரப்புக்கு ஆதரவாக உள்ளனர். ஓ.பன்னீர் செல்வம் தரப்புக்கு நெருக்கமாக இருந்த நத்தம் விஸ்வநாதன், ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டோர் எடப்பாடி தரப்புக்கு தாவி விட்ட நிலையில், சார்பு அணிகளான எம்ஜிஆர் இளைஞரணி, புரட்சித் தலைவி அம்மா பேரவை, இளைஞர் இளம்பெண்கள் பாசறை, தகவல் தொழில்நுட்பப் பிரிவு உட்பட பலரும் எடப்பாடி தரப்பிடம் சரணடைந்து விட்டனர்.
இதையும் படிங்க : இரட்டை இலையை எவனுக்கும் விட்டுத் தர மாட்டோம்..களத்தில் குதித்த மாயத்தேவர் பாசறை.. யார் இந்த மாயத்தேவர்?
இதையும் படிங்க : TASMAC: மாஸ்க் இருந்தா தான், இனி மது கிடைக்கும்.. டாஸ்மாக் அதிரடி உத்தரவு - குடிமகன்கள் ஷாக்!
வைத்திலிங்கத்தின் முடிவு ?
அதேபோல தர்மயுத்தத்தின் போது, ஓபிஎஸ் உடன் இருந்த கே.பி முனுசாமி, மாஃபா பாண்டியராஜன், மைத்ரேயன் போன்றோர் எடப்பாடி தரப்பிடம் அடைக்கலம் புகுந்ததால், ஓபிஎஸ் பக்கம் மிக மிக குறைந்த அளவிலான நிர்வாகிகளே ஆதரவாக இருக்கின்றனர். இந்நிலையில் வைத்திலிங்கத்தை எடப்பாடி பழனிசாமி தரப்பு இழுப்பதாக அரசியல் வட்டாரங்களில் தகவல் வெளியாகி உள்ளது.
அதுவும் துணை பொதுச்செயலாளர் அல்லது துணை பொருளாளர் என என்ன பதவி வேண்டுமோ ? கொடுக்க இபிஎஸ் தரப்பு தயாராக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இந்த செய்தி ஓபிஎஸ்சுக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்து உள்ளது. ஓபிஎஸ் தரப்பில் வலிமையாக இருப்பவரில் முதன்மையானவர் வைத்திலிங்கம். அவரை ஸ்கெட்ச் போட்டு இழுத்து விட்டால் அது ஓபிஎஸ் தரப்புக்கு பெரும் பின்னடைவாக இருக்கும் என்று கணக்கு போடுகிறார்கள் இபிஎஸ் தரப்பு.
இதையும் படிங்க : MGR : ஒற்றை தலைமை விவகாரம் - அன்றே கணித்த எம்.ஜி.ஆர்.. தீர்வு இதுதான் !!