MGR : ஒற்றை தலைமை விவகாரம் - அன்றே கணித்த எம்.ஜி.ஆர்.. தீர்வு இதுதான் !!
MGR : ஜூலை 11 ஆம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள பொதுக்குழு கூட்டத்தை நடத்தவிடாமல் செய்வதற்கு தேவையான அரசியல் மற்றும் சட்டரீதியான நடவடிக்கைகளில் ஓபிஎஸ் தரப்பு இறங்கி உள்ளது.
ஒற்றை தலைமை விவகாரம்
சென்னை வானகரத்தில் கடந்த 23 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் இபிஎஸ்ஸை கட்சியின் ஒற்றைத் தலைமையாக தேர்ந்தெடுக்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் இதுதொடர்பான ஓபிஎஸ் தரப்பினரின் மேல்முறையீட்டு மனு மீது இரவுோடு இரவாக சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் காரணமாக அன்றைய தினம் பொதுக்குழுவில் இபிஎஸ்ஸை ஒற்றைத் தலைமையாக தேர்ந்தெடுக்க முடியாமல் போனது.
ஓபிஎஸ் தரப்பின் இந்த நடவடிக்கைக்கு பதிலடி தரும் விதத்தில், அதிமுக அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் தேர்ந்தெடுக்கப்படுவதாக பொதுக்குழுவில் அறிவிக்கப்பட்டது. அத்துடன் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய பதவிகள் காலாவதியாகிவிட்டதாகவும், அவைத் தலைவரின் தலைமையில் வரும் ஜூலை 11 ஆம் தேதி மீண்டும் பொதுக்குழு நடைபெறும் எனவும், அன்றைய தினம் கட்சிக்கு ஒற்றைத் தலைமை யாரென ஒருமனதாக முடிவு செய்யப்படும் என்று இபிஎஸ் தரப்பினர் பகிரங்கமாக அறிவித்துள்ளனர்.
இதையும் படிங்க : இரட்டை இலையை எவனுக்கும் விட்டுத் தர மாட்டோம்..களத்தில் குதித்த மாயத்தேவர் பாசறை.. யார் இந்த மாயத்தேவர்?
இதையும் படிங்க : AIADMK : முடங்கிய இரட்டை இலை சின்னம்.. கதறும் ர.ரக்கள் - உள்ளாட்சி இடைத்தேர்தலில் அதிமுக சோகம் !
அதிமுக பொதுக்குழு
ஆனால், ஜூன் 23 ஆம் தேதி நடைபெற்ற பொதுக் குழு சட்டத்துக்கு புறம்பாக நடைபெற்றுள்ளதால் அது செல்லாது என்று ஓபிஎஸ் தரப்பினர் கூறி வருகின்றனர். அதேசமயம் ஜூலை 11 ஆம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள பொதுக்குழு கூட்டத்தை நடத்தவிடாமல் செய்வதற்கு தேவையான அரசியல் மற்றும் சட்டரீதியான நடவடிக்கைகளில் ஓபிஎஸ் தரப்பு இறங்கி உள்ளது.
எம்.ஜி.ஆர்
இந்நிலையில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் கே.சி. பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் அதிமுகவின் நிறுவனரான எம்ஜிஆரின் உயிலை சுட்டிக்காட்டி டுவீட் செய்துள்ளார். அது தற்போது வைரலாகி வருகிறது.
அதில், ‘18.01.1987அன்றைய தேதியில் எம்ஜிஆர் அதிமுகவில் பிளவு ஏற்பட்டால் கட்சியில் உள்ள உறுப்பினர்களில் 80%பேர் ஆதரவை பெற்றவர்கள் தலைமையில் கட்சியை வழி நடத்த வேண்டும் என்று தன்னுடைய உயிலில் குறிப்பிட்டுள்ளார் அதன் அடிப்படையில் எம்ஜிஆர் தொண்டர்களால் ஒரு தலைமையை தேர்ந்தெடுப்போம். நிச்சியமாக அது இந்த சுயநலவாதிகளும், அடிமைகளும்,ஊழல்வாதிகளும் அல்லாத தலைமையை தேர்ந்தெடுப்போம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க : TASMAC: மாஸ்க் இருந்தா தான், இனி மது கிடைக்கும்.. டாஸ்மாக் அதிரடி உத்தரவு - குடிமகன்கள் ஷாக்!