AIADMK : முடங்கிய இரட்டை இலை சின்னம்.. கதறும் ர.ரக்கள் - உள்ளாட்சி இடைத்தேர்தலில் அதிமுக சோகம் !

AIADMK : இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஒன்று சேர்வார்களா ? அப்படியே சேர்ந்தாலும் இரட்டை இலை சின்னம் கிடைக்குமா ? என்று உள்ளாட்சி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் கலக்கத்தில் இருக்கின்றனர்.

Will AIADMK candidates confuse double leaf symbol in local by elections

உள்ளாட்சி இடைத்தேர்தல்

உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள இடங்களுக்கு ஜூலை 9-ம் தேதி தேர்தல் நடத்த மாநில தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டது. அதன்படி ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள 2 மாவட்ட கவுன்சிலர், 20 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர், 40 ஊராட்சி தலைவர்கள், 436 கிராம ஊராட்சி உறுப்பினர், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள 2 மாநகராட்சி கவுன்சிலர், 2 நகராட்சி கவுன்சிலர், 8 பேரூராட்சி கவுன்சிலர் உள்ளிட்ட 510 பதவிகளுக்கு இடைத் தேர்தல் நடைபெறுகிறது.

Will AIADMK candidates confuse double leaf symbol in local by elections

நேற்று மாலை 5 மணிக்குள் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறியிருந்தது. இதனால் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் சுயேட்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தனர். கட்சி அடிப்படையில் தேர்தல் நடைபெறவுள்ளதால், வேட்பாளர்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் கட்சிகளின் சின்னத்தை ஒதுக்க உள்ளது.

இதையும் படிங்க : இரட்டை இலையை எவனுக்கும் விட்டுத் தர மாட்டோம்..களத்தில் குதித்த மாயத்தேவர் பாசறை.. யார் இந்த மாயத்தேவர்?

இதையும் படிங்க : தேமுதிக தலைவர் ஆகிறாரா விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் ? வெளியான அதிர்ச்சி தகவல் !

இரட்டை இலை

மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், நகராட்சி மற்றும் மாநகராட்சி கவுன்சிலர் உள்ளிட்ட 34 பதவியிடங்ளுக்கு கட்சி அடிப்படையில் தேர்தல் நடைபெறுகிறது.இந்த பதவிகளுக்கு கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு அந்த கட்சிகளின் சின்னங்களை ஒதுக்கீடு செய்ய ஏ மற்றும் பி என்ற இரண்டு படிவங்களை சமர்பிக்க வேண்டும். இந்த படிவங்களில் சம்பந்தபட்ட கட்சியின் தலைவர்கள் கையெழுத்து போட வேண்டும்.

Will AIADMK candidates confuse double leaf symbol in local by elections

அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சி சர்ச்சையினால், ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளே செல்லாது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்த நிலையில் இந்த படிவங்களில் யார் கையெழுத்து இடுவார்கள் என்ற புதிய சர்ச்சை எழுந்துள்ளது. இந்த ஏ மற்றும் பி படிவங்களை வேட்புமனுக்கள் திரும்ப பெறுவதற்கான கடைசி நாளான ஜூன் 30ஆம் தேதி மாலை 3 மணிக்குள் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

கதறும் அதிமுக வேட்பாளர்கள்

அதிமுக வேட்பாளர்கள் அனைவரும் வரும் 30ஆம் தேதிக்குள் ஒருங்கிணைப்பாளர்கள் கையெழுத்தைப் பெற்று வேட்புமனுக்களை சமர்பிப்பார்களா அல்லது மாட்டார்களா ? அதிமுக வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்குமா ? பெரிய எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். அதுமட்டுமின்றி இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஒன்று சேர்வார்களா ? அப்படியே சேர்ந்தாலும் இரட்டை இலை சின்னம் கிடைக்குமா ? என்று உள்ளாட்சி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் கலக்கத்தில் இருக்கின்றனர்.

இதையும் படிங்க : AIADMK : ஒற்றை தலைமைக்கு 'ஓகே' சொன்ன சசிகலா.. அடுத்து எடப்பாடியா? பன்னீரா? உச்சகட்ட பரபரப்பு

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios