AIADMK : ஒற்றை தலைமைக்கு 'ஓகே' சொன்ன சசிகலா.. அடுத்து எடப்பாடியா? பன்னீரா? உச்சகட்ட பரபரப்பு
AIADMK : தற்போது அதிமுகவில் நிலவும் பிரச்னைகளை காண கஷ்டமாகத்தான் இருக்கிறது. ஆனால் இதை தொண்டர்களின் உறுதுணையோடு சரி செய்திட முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.
அதிமுக பொதுக்குழு
சென்னையில் அதிமுக பொதுக்குழு கடந்த 23-ந் தேதி வரலாறு காணாத குழப்பங்கள், வன்முறைகளுடன் முடிவடைந்தது. அதிமுகவின் 50 ஆண்டு கால வரலாற்றில் 30 நிமிடத்தில் முடித்து வைக்கப்பட்ட முதல் பொதுக்குழு இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. கட்சியின் தீர்மானக் குழு உருவாக்கிய தீர்மானங்களையே பொதுக்குழு ஒட்டுமொத்தமாக நிராகரித்த வினோத சம்பவமும் நடந்தது இந்த பொதுக்குழுவில்தான்.
காரணம் ஒற்றை தலைமை என்ற கோஷம்தான். பெரும் பரபரப்புக்கு மத்தியில் நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் தமிழ்மகன் உசேன் புதிய அவைத்தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார். அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களும் ஒற்றைத் தலைமையை விரும்புவதாக அடுத்தடுத்து பேசியவர்கள் கூறினர். 2190 பொதுக்குழு உறுப்பினர்கள் கையெழுத்திட்டதாக கூறி ஒரு கடிதத்தை சி.வி சண்முகம் புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட அவைத் தலைவர் தமிழ் மகன் உசேனிடம் அளித்தார்.
இதையும் படிங்க : இரட்டை இலையை எவனுக்கும் விட்டுத் தர மாட்டோம்..களத்தில் குதித்த மாயத்தேவர் பாசறை.. யார் இந்த மாயத்தேவர்?
ஒற்றை தலைமை
ஒற்றைத் தலைமை தேவை என்பதை வலியுறுத்தியே இந்த கடிதம் அளிக்கப்படுகிறது. இரட்டைத் தலைமையோடு திமுகவை வலுவாக எதிர்த்துப் போராட முடியவில்லை என்று குறிப்பிட்டார். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியாகிவிட்டது என்று கூறப்பட்டதற்கு மறுப்பும், கண்டனமும் தெரிவித்து சென்றார் வைத்தியலிங்கம். சசிகலா ஒருபக்கம்,ஓபிஎஸ் ஒருபக்கம் சுற்றுப்பயணம் கிளம்பிவிட்டனர்.
திமுகவின் கழக தலைமை நிலைய செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி இருந்து வருகிறார். இதை அடிப்படையாக வைத்தோ, இதையொட்டியோ இன்று நடைபெறும் ஆலோசனையில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சசிகலா
அரசியல் பயணம் மேற்கொண்டுள்ள சசிகலா திருத்தணியில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய போது, 'எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு இதுப்போன்ற தலைமை பிரச்னை எழுந்தது. அப்போது அதனை சரியாக கையாண்டு சரி செய்யப்பட்டது. அதுபோல, ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அதிமுகவில் மீண்டும் தலைமை பிரச்னை எழுந்திருக்கிறது. இதையும் சரி செய்து மீண்டும் அதிமுக ஆட்சியை தமிழகத்தில் அமைத்து மக்களுக்கான ஆட்சியை கொடுப்போம்.
இதையும் படிங்க : நான் மூன்றாம் கலைஞரா ? உஷார் ஆன உதயநிதி.. இனி என்னை இப்படி கூப்பிடுங்க போதும்!
அதிமுக பொதுச்செயலாளர்
தற்போது அதிமுகவில் நிலவும் பிரச்னைகளை காண கஷ்டமாகத்தான் இருக்கிறது. ஆனால் இதை தொண்டர்களின் உறுதுணையோடு சரி செய்திட முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.மக்களிடையே, தொண்டர்களிடையே நல்ல வரவேற்பு எனக்கு இருக்கிறது. என் தலைமையில் கட்சி இருக்க வேண்டும் என்றே தொண்டர்களும் விரும்புகிறார்கள். என்னுடைய அரசியல் சுற்றுப்பயணம் நிச்சயம் வெற்றிப்பெறும். அதிமுக தொண்டர்களும், மக்களும் இருக்கிறார்கள்.
ஓ.பன்னீர்செல்வம் , எடப்பாடி பழனிசாமி இடையேயான பனிப்போரை கொண்டு மொத்த அதிமுகவும் அப்படியே இருக்கும் என எண்ணிட முடியாது. இது எங்களுக்கும் இருக்கும் பிரச்னை. இதனை நாங்கள் சரி செய்வோம். அதிமுகவை கட்டிக்காக்கும் பொறுப்பு எனக்கு உள்ளது. ஒற்றை தலைமையின் கீழ் நிச்சயம் அதிமுக வரும்' என்று கூறினார்.
இதையும் படிங்க : தேமுதிக தலைவர் ஆகிறாரா விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் ? வெளியான அதிர்ச்சி தகவல் !