திருவள்ளூர்

சென்னை - திருவள்ளூர் பிரிவில் ஆவடி - பட்டாபிராம் மேற்கு பகுதி இடையே பராமரிப்பு பணிகள் நடப்பதால் மார்ச் 3, மற்றும் 4 (அதாவது இன்று மற்றும் நாளை) புறநகர் இரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை கடற்கரை -  வேளச்சேரி இடையே பறக்கும் இரயில்வழித் தடத்தில் பராமரிப்பு பணி காரணமாக மார்ச் 3, 4 ஆகிய தேதிகளில் இரயில் சேவைகள் மாற்றப்பட்டுள்ளன.

சென்னை கடற்கரை - வேளச்சேரி வரை மார்ச் 3-ஆம் தேதி காலை 9.50 முதல் மாலை 4 மணி வரை பறக்கும் இரயில் வழித் தடத்தில் இரயில் சேவை இருக்காது.

அதேபோல், வேளச்சேரி - சென்னை கடற்கரை வரை காலை 9.50 முதல் மாலை 4 மணி வரை சேவை இருக்காது.

பறக்கும் இரயில்வழித் தடத்தில் வரும் 4-ஆம் தேதியும் இரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, இன்று முழுமையாக ரத்து செய்யப்படும் இரயில்கள்:

1. வேளச்சேரி - பட்டாபிராம் இராணுவப் பகுதிக்கு காலை 8.20, 9.15, நண்பகல் 12.55 மணிக்கு புறப்படும் மின்சார இரயில்கள்.

2. மூர்மார்க்கெட் காம்ப்ளக்ஸ் - பட்டாபிராம் இராணுவப் பகுதிக்கு 11.15, 12.20, பிற்பகல் 1 மணிக்கு புறப்படும் மின்சார இரயில்கள்.

3. வேளச்சேரி - திருவள்ளூருக்கு நண்பகல் 12.15, முற்பகல் 2.35 மணிக்கு புறப்படும் மின்சார இரயில்கள்.

4. வேளச்சேரி - அரக்கோணத்துக்கு பிற்பகல் 1.35 மணிக்கு புறப்படும் மின்சார இரயில்.

சென்னை கடற்கரை - வேளச்சேரி இடையே புறநகர் இரயில் சேவையில் இன்று ரத்து செய்யப்படும் மின்சார இரயில்கள்: (சென்னை கடற்கரை வரை மட்டும் இயக்கப்படும்.)

1. பட்டாபிராம் இராணுவப் பகுதி - வேளச்சேரிக்கு காலை 8.45 மணிக்கு புறப்படும் மின்சார இரயில்.

2. திருத்தணி - வேளச்சேரிக்கு காலை 8.50 மணிக்கு புறப்படும் மின்சார இரயில்.

3. திருவள்ளூர் - வேளச்சேரிக்கு முற்பகல் 11.05 மணிக்கு புறப்படும் மின்சார இரயில்

4. ஆவடி - வேளச்சேரிக்கு நண்பகல் 12.10 மணிக்கு புறப்படும் மின்சார இரயில்

5. கடம்பத்தூர் - வேளச்சேரிக்கு நண்பகல் 12.05க்கு புறப்படும் மின்சார இரயில்.

மார்ச் 3-ஆம் தேதி இயக்கப்படும் பயணிகள் சிறப்பு மின்சார இஇரயில்கள்:

1.வேளச்சேரி - ஆவடிக்கு காலை 8.20 மணிக்கு புறப்படும் பயணிகள் சிறப்பு மின்சார இரயில்.

2. வேளச்சேரி - திருநின்றவூருக்கு காலை 9.15 மணிக்கு புறப்படும் பயணிகள் சிறப்பு மின்சார இரயில்.

3. மூர்மார்க்கெட் காம்ப்ளக்ஸ் - திருநின்றவூருக்கு முற்பகல் 11 மணிக்கு புறப்படும் பயணிகள் சிறப்பு மின்சார இரயில்.

4. மூர் மார்க்கெட் காம்ப்ளக்ஸ் - பட்டாபிராம் ராணுவ பகுதிக்கு பிற்பகல் 1.10 மணிக்கு புறப்படும் பயணிகள் சிறப்பு மின்சார இரயில்.

5. சென்னை கடற்கரை - திருவள்ளூருக்கு பிற்பகல் 1.10 மணிக்கு புறப்படும் பயணிகள் சிறப்பு மின்சார இரயில்.

6. சென்னை கடற்கரை - பட்டாபிராம் ராணுவ பகுதிக்கு பிற்பகல் 1.50 மணிக்கு புறப்படும் பயணிகள் சிறப்பு மின்சார இரயில்.

7. சென்னை கடற்கரை - அரக்கோணத்துக்கு பிற்பகல் 2.25 மணிக்கு புறப்படும் பயணிகள் சிறப்பு மின்சார இரயில்.

8. ஆவடி - மூர்மார்க்கெட் காம்ப்ளக்ஸுக்கு காலை 10.05 மணிக்கு புறப்படும் பயணிகள் சிறப்பு மின்சார இரயில்.

9. திருநின்றவூர் - மூர்மார்க்கெட் காம்ப்ளக்ஸுக்கு முற்பகல் 11.20 மணி மற்றும் நண்பகல் 12 மணிக்கு புறப்படும் பயணிகள் சிறப்பு மின்சார இரயில்.