முதுகலை ஆசிரியர் பணிகளுக்கு நாளை நேரடி நியமன கலந்தாய்வு.. மையங்கள் விவரம் வெளியீடு..
ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வெளியிடப்பட்ட தெரிவு பட்டியலில் உள்ளவர்களுக்கு நேரடி நியமன கலந்தாய்வு நாளை நடைபெறுகிறது. பாட வாரியாக கலந்தாய்வில் பங்குபெறும் ஆசிரியர்களுக்கு தனிதனியாக தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள 2849 முதுகலை ஆசிரியர் , உடற்கல்வி இயக்குனர் நிலை - 1 மற்றும் கணினி பயிற்றுனர் நிலை - 1 பணிகளுக்கான இடங்களை நிரப்புவதற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் போட்டித்தேர்வு நடத்தப்பட்டது.
பின்னர் முடிவுகள் வெளியாகி, சான்றிதழ் சரிப்பார்ப்பு முடிந்த நிலையில் கடந்த மாதத்தில் தமிழ், ஆங்கிலம், இயற்பியல், கணிதம், வணிகவியல், பொருளியல் ஆகிய பாடங்களுக்கான பணிநாடுநர்களின் தெரிவு பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இந்நிலையில் நேற்று பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின், 2489 ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
மேலும் படிக்க:தமிழக அரசின் மின் கட்டண உயர்வுக்கு தடையில்லை - பொதுமக்களுக்கு அதிர்ச்சி அளித்த உச்ச நீதிமன்றம்
இந்நிலையில் சென்னையில் நாளை தற்காலிக தெரிவு பட்டியலில் இடம்பெற்றுள்ளவர்களுக்கான நேரடி நியமன கலந்தாய்வு நடைபெறுகிறது. மேலும் பாடம் வாரியாக தனித்தனியாக கலந்தாய்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதுக்குறித்த அறிவிப்பை தற்போது பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
பணிநாடுநர்கள் தங்களின் சான்றிதழ் சரிபார்ப்பு அழைப்புக் கடிதம் மற்றும் அனைத்து விதமான கல்வி சான்றிதழ்களின் நகல்களை கொண்டு வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கலந்தாய்வு மையம் விவரம்:
தமிழ் - ப்ரெசிடென்சி(presidency) மகளிர் மேல்நிலைப்பள்ளி எழும்பூர்
ஆங்கிலம்- எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாக்கட்டடம் , முதல்தளம் , டிபிஐ வளாகம்
வணிகவியல் - எம்.சி.சி மேல்நிலைப்பள்ளி, சேத்துப்பட்டு
பொருளியல் - அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி , அசோக்நகர்
கணிதம் - லேடி வெலிங்டன் மேல்நிலைப்பள்ளி
இயற்பியல் - அண்ணா நூற்றாண்டு நூலகம்
மேலும் படிக்க:அதிகரிக்கும் இளம் குற்றவாளிகள்..! அலார்ட் ஆன கோவை போலீஸ்..! இளைஞர்களை கவர புதிய திட்டம் அறிமுகம்