முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்‌, உடற்கல்வி இயக்குநர்‌, கணினிப்‌ பயிற்றுநர்‌ காலிப் பணியிடங்களுக்கான‌ தற்காலிக ஆசிரியர் தேர்வுப் பட்டியலை டிஆர்பி வெளியிட்டுள்ளது. http://www.trb.tn.nic.in/pg2021/10092022/msg%20subject.htm என்ற இணையதளத்தின் மூலம் ஆசிரியர் தேர்வு பட்டியலை தெரிந்துக் கொள்ளலாம். 

இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியம்‌ வெளியிட்டுள்ள அறிக்கையில்,''2020-2021 ஆம்‌ ஆண்டு முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்‌, உடற்கல்வி இயக்குநர்‌ நிலை-I, கணினிப்‌ பயிற்றுநர்‌ நிலை- I ஆகிய காலிப் பணியிடங்களுக்கான‌ நேரடி நியமனத்திற்கான அறிவிக்கை ஆசிரியர்‌ தேர்வு வாரியத்தால்‌ 09.09.2021 அன்று வெளியிடப்பட்டது. 

அதனைத்‌ தொடர்ந்து 12.02.2022 முதல்‌ 20.02.2022 வரை கணினி வழித்‌ தேர்வுகள்‌ (Computer Based Test) நடத்தப்பட்டு தேர்வு முடிவுகள்‌ 04.07.2022 அன்று ஆசிரியர் தேர்வு வாரியத்தால்‌ வெளியிடப்பட்டன. 25.08.2022 நாளிட்ட ஆசிரியர்‌ தேர்வு வாரிய பத்திரிக்கை செய்தியில்‌ பணிநாடுநர்கள்‌ தமிழ்‌ வழியில்‌ பயின்றதற்கான தங்களது சான்றிதழ்களை ஆசிரியர்‌ தேர்வு வாரிய இணையதளம்‌ வழியாக 26.08.2022 முதல்‌ 30.08.2022 வரை பதிவேற்றம்‌ செய்யுமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் படிக்க:SBI வங்கியில் காலியாக உள்ள 665 பணியிடங்கள்.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்..? முழு விவரம் இதோ..

பணிநாடுநர்கள்‌ விண்ணப்பத்துடன்‌ பதிவேற்றம்‌ செய்யப்பட்ட சான்றிதழ்கள்‌ / ஆவணங்கள்‌ மற்றும்‌ கூடுதலாக பதிவேற்றம்‌ செய்யப்பட்ட தமிழ்வழியில்‌ பயின்றதற்கான சான்றிதழ்களின்‌ அடிப்படையில்‌ பணிநாடுநர்கள்‌ விவரங்கள்‌ பரிசீலிக்கப்பட்‌டு, அறிவிக்கையில்‌ குறிப்பிட்டுள்ள 17 பாடங்களுக்கு 27.08.2022 அன்று இவ்வாரிய இணையதளத்தில்‌ வெளியிடப்பட்ட 1:2 விகிதாசாரப்படி சான்றிதழ்‌ சரிபார்ப்பிற்கான பட்டியல்‌ ஆசிரியர்‌ தேர்வு வாரிய இணையதளத்தில்‌ வெளியிடப்பட்டது. 

அதைத் தொடர்ந்து 02.09.2022 முதல்‌ 04.09.2022 ஆகிய நாட்களில்‌ ஆசிரியர்‌ தேர்வு வாரியத்தில்‌ விண்ணப்பதாரர்களுக்கு சான்றிதழ்கள்‌ சரிபார்ப்புப்‌ பணிகள்‌ மேற்கொள்ளப்பட்டன. இதன் அடிப்படையில்‌ அறிவிக்கையில்‌ தெரிவிக்கப்பட்டுள்ள விவரங்களின்‌ அடிப்படையிலும்‌ இனச்சுழற்சி அடிப்படையிலும்‌ தற்போது
1. Geography
2. History
3, Physics

மேலும் படிக்க:ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வு முடிவுகள் வெளியானது.. மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்வது எப்படி..? விவரம் இங்கே..

ஆகிய 3 பாடங்களுக்கு தகுதியுள்ளவர்களுக்கான தற்காலிகத்‌ தெரிவுப்‌ பட்டியல்கள்‌ முதற்கட்டமாக ஆசிரியர்‌ தேர்வு வாரிய இணையதளத்தில்‌ வெளியிடப்பட்டுள்ளன. உரிய விவரங்களை விண்ணப்பதாரர்கள்‌ இணையதளத்தை பார்வையிட்டு தெரிந்து கொள்ளுமாறு கேட்டுக்‌ கொள்ளப்படுகிறார்கள்‌'' என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.