ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வு முடிவுகள் வெளியானது.. மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்வது எப்படி..? விவரம் இங்கே..
இந்திய தொழில்நுட்பக் கழகம் (IIT) பம்பாய் கூட்டு நுழைவுத் தேர்வு ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வு முடிவு வெளியானது. இன்று காலை 10 மணிக்கு தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், தேர்வர்கள் தங்களது முடிவுகளை அதிகாரபூர்வ இணையதளமான jeeadv.ac.in. மூலம் தெரிந்துக் கொள்ளலாம்.

மேலும் படிக்க:நேரடி படிப்புக்கு இணையானதா ஆன்லைன் படிப்பு? விளக்கம் அளிக்கும் பல்கலைக்கழக மானியக் குழு(யுஜிசி)!!
மேலும் பதிவு எண், பிறந்த தேதி மற்றும் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் ஆகியவற்றை உள்ளீடு செய்து, தங்களது மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். மேலும் இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் தகுதி பட்டியல் மற்றும் இறுதி விடைக் குறிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க:SSC யின் ஒருங்கிணைந்த பட்டதாரி தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.. எப்படி விண்ணப்பிப்பது.. விவரம் இங்கே
இதனிடையே தகுதி பட்டியலில் இடம்பெற்றவர்கள் செப்டம்பர் 12 ஆம் தேதி நாளை நடத்தப்படும் கூட்டு இருக்கை ஒதுக்கீடு (ஜோசா) கலந்தாய்வுக்கு தகுதிபெற்றவர்கள். இந்த JoSAA கவுன்சிலிங் ஆறு சுற்றுகளாக நடத்தப்படும். தேர்வர்கள் ஃப்ரீஸ், ஃப்ளோட் மற்றும் ஸ்லைடு விருப்பங்களைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் ஒதுக்கீடு முடிவை உறுதி செய்யலாம். ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு ஆகஸ்ட் 28 ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வு நாட்டின் பல்வேறு நகரங்களில் உள்ள தேர்வு மையங்களில் நடத்தப்பட்டது.