Asianet News TamilAsianet News Tamil

மாணவர்களுக்கு அமைச்சர் வைத்த ஆப்பு..! ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது..! பெற்றோர்கள் குஷியோ குஷி..!

தங்கள் குழந்தைகள் பள்ளிக்கு பத்திரமாக சென்று இருப்பார்களா..? மீண்டும் பள்ளியில் இருந்து மாலை சரியான நேரத்தில் கிளம்பி விட்டார்களா என்ற எண்ணம் இருந்துக்கொண்டே இருக்கும். அந்த வகையில் தற்போது இந்த பிரச்சனைக்கு மிக சூப்பர் தீர்வு கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது.

tn govt schools developed a lot and minister senkottaiyan doing great job for education
Author
Chennai, First Published Oct 13, 2018, 5:03 PM IST

தங்கள் குழந்தைகள் பள்ளிக்கு பத்திரமாக சென்று இருப்பார்களா..? மீண்டும் பள்ளியில் இருந்து மாலை சரியான நேரத்தில் கிளம்பி விட்டார்களா என்ற எண்ணம் இருந்துக்கொண்டே இருக்கும். அந்த வகையில் தற்போது இந்த பிரச்சனைக்கு மிக சூப்பர் = தீர்வு கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது.

பள்ளி செல்லும் குழந்தைகளின் பாதுகாப்பு இன்று கேள்வி குறியாகி உள்ளது. பெற்றோர்கள் மிகவும் வேதனை கொள்ளும் விஷயம் தம் பிள்ளைகள் பாதுகாப்பாக பள்ளிக்கு செல்கிறார்களா என்பதே....

tn govt schools developed a lot and minister senkottaiyan doing great job for education

பள்ளிகல்விதுறையில் எடுத்த நடவடிக்கையில் தானியங்கி வருகை பதிவு வசதி கொண்டுவர அடையாள அட்டையில் சிப் பொருத்தப்பட்டு, பெற்றோர்களின் மொபைல் எண்ணையும் அதில் பதிவு செய்யப்பட்டிருக்கும்.இந்த முறையை சென்னை போரூரில் உள்ள மகளிர் மேனிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கி வைத்தார். 

tn govt schools developed a lot and minister senkottaiyan doing great job for education
 
பள்ளி நுழைவு வாயிலில் ரேடியோ அலைகள் பாய்ந்துக்கொண்டிருக்கும் கருவிகள் வைக்கப்பட்டிருக்கும். இதன் வழியாக அடையாள அட்டை அணிந்து செல்லும் மாணவர்களின் வருகை உடனடியாக பதிவு ஆகி விடும்.

குறுஞ்செய்தி 

இதே போன்று மாணவர்களின் வருகையை தெரிந்துக்கொள்ள பெற்றோர்களுக்கு உடனடியாக குறுஞ்செய்தி அனுப்பப்படுகிறது. அடையாள அட்டையுடன் சிப் பொருத்தபபடு மொபைல் எண்ணையும் இணைக்கப்பட்டு உள்ளதால், தங்கள் பிள்ளைகள் பள்ளிக்குள் நுழையும் போது உடனடியாக மெசேஜ் சென்று விடும். அதே போன்று பள்ளி விட்டவுடன் மாணவர்கள் வெளியில் வரும் போதும் உடனடியாக தானாகவே ஒரு மெசேஜ்   பெற்றோர்களின் செல்போன் எண்ணுக்கு சென்று விடும். 

tn govt schools developed a lot and minister senkottaiyan doing great job for education

இதன் மூலம் மாணவர்கள் நேரம் தாழ்த்தி செல்வதும், பாட நேரத்தில் கட் அடித்துவிட்டு ஊர் சுற்றுவதும் தடுக்கப்படும். இதை விட மேலானது, பாதுகாப்பு தன்மையை உறுதிப்படுத்துகிறது.  

இதன் மூலம் மாணவர்கள் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது...என்ற நிலை உருவாகி உள்ளது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக செங்கோட்டையன் பொறுப்பேற்ற பின்பு பல்வேறு மாற்றத்தை கொண்டு வருகிறார். அவர் கொண்டு வரும் அனைத்து திட்டமும் கல்வித்துறையில் பெரும் மாற்றத்தை கொண்டு வந்து உள்ளது. அதற்கு அடுத்தப்படியாக தற்போது செங்கோட்டையன் கொண்டு வந்துள்ள இந்த சிறப்பு திட்டம் மூலம் பெற்றோர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தது மட்டுமல்லாமல் பெருமூச்சு விடுகின்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios