Asianet News TamilAsianet News Tamil

இலவச பயணத்திற்கு இனி தனி பேருந்து.. தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு !

இனி இலவச பயணத்திற்கு என்று தனியாக பேருந்து விடப்படும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

Tn govt announcement separate buses for free bus travel
Author
First Published Jul 12, 2022, 8:37 PM IST

தமிழக அரசு அறிவித்த பெண்களுக்கு இலவச பேருந்து திட்டம் பெண்கள், மாற்று திறனாளிகள், திருநங்கைகள் என பலரும் பயனடைந்து வருகின்றனர்.  மாநகர பேருந்துகளில் விரைவு பேருந்துகள் அல்லாத பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என்ற இந்த அறிவிப்பு லட்சக்கணக்கான பெண்களுக்கு உதவியாக இருந்து வருகிறது. 

Tn govt announcement separate buses for free bus travel

கடந்த ஆண்டுக்கு முன்பு வரை மாநகர பஸ்களில் பயணம் செய்யும் பெண்களின் எண்ணிக்கை 40 சதவீதமாக இருந்தது.  அது தற்போது 60 சதவீதமாக அதிகரித்துள்ளதாக அமைச்சர் எஸ்.எஸ் சிவசங்கர் அண்மையில்  தெரிவித்திருந்தார். கடந்த 1 வருடத்தில் மட்டும் 132 கோடிக்கும் அதிகமானோர் இந்த திட்டத்தில் பயன் அடைந்துள்ளனர். 

மேலும் செய்திகளுக்கு.. அதிமுக கட்சிக்கு இத்தனை கோடி சொத்து? எப்படி இருந்த கட்சி.. குமுறும் அதிமுக தொண்டர்கள்.!

இந்த திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த தமிழகத்தில் உள்ள போக்குவரத்து கழகங்களுக்கு அரசு ரூ. 1600 கோடியை மானியமாக அளித்துள்ளது. பெண்கள் இலவச பயணம் செய்யும் பஸ்களில் முன்பக்க கண்ணாடியில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருக்கும். அதை பார்த்தே பெண்கள் அதில் ஏறி செல்வது வழக்கம். ஆனால் சில பஸ்களில் ஸ்டிக்கர் ஒட்டப்படாமல் உள்ளது. சில ஸ்டிக்கர்களை தூரத்தில் நின்று படிக்க முடியாத நிலை உள்ளது.

Tn govt announcement separate buses for free bus travel

மேலும் செய்திகளுக்கு.. கயல் சீரியலில் வரும் கயல் தான் சின்னம்மா.. மேடையில் கண்ணீர் விட்ட திவாகரன் - சசிகலா !

இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் மாநகர போக்குவரத்து கழகம் பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் சாதாரண பஸ்களை 'பிங்க்' நிறத்தில் மாற்றியுள்ளது. இந்த பஸ்கள் அறிமுகத்தின் மூலம் பெண்கள் குழப்பம் இன்றி தூரத்தில் இருந்தே பஸ்களை பார்த்து அதில் ஏறி செல்லலாம் என்றும் கூறப்படுகிறது.

மாநகர போக்குவரத்து கழகத்தின் இந்த 'பிங்க்' நிற பஸ்கள் அடுத்த வாரம் சில வழித்தடங்களில் சோதனை ஓட்டத்தை தொடங்குகிறது. அதற்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து அனைத்து இடங்களுக்கும் அவை விரிவுபடுத்தப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

மேலும் செய்திகளுக்கு.. ஐ.டி ரெய்டில் மாட்டிய 500 கோடி.. சிக்கிய எடப்பாடியின் உறவினர் & வேலுமணியின் நண்பர்.!

Follow Us:
Download App:
  • android
  • ios