அதிமுக கட்சிக்கு இத்தனை கோடி சொத்து? எப்படி இருந்த கட்சி.. குமுறும் அதிமுக தொண்டர்கள்.!
ராணுவ கட்டுப்பாடுடன் இருக்கும் கட்சி என்று சொல்லியதோடு, மட்டுமின்றி செயல்படுத்தியும் காட்டினார் ஜெயலலிதா.
அதிமுகவின் அசைக்க முடியாத தலைவராக எம்ஜிஆர் இருந்த போதும் அவருக்கு எதிரான குரல்களும் அக்கட்சியில் இருந்தன. அதிமுகவை எம்ஜிஆர் தொடங்கிய போது உடனிருந்தவர்கள் திமுகவுக்கே மீண்டும் திரும்பிப் போயினர். ஆனால் அதிமுகவில் தொண்டர்கள் பலம் கொண்டவர்களாக அவர்கள் இருந்தது இல்லை. ஜெயலலிதாவை அதிமுகவுக்குள் எம்ஜிஆர் கொண்டுவந்த போது மூத்த தலைவர்களில் ஒருவரான எஸ்.டி சோமசுந்தரம் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார்.
அத்துடன் அதிமுகவை விட்டு வெளியேறி தனிக்கட்சி தொடங்கினார். அப்போது அதிமுக தலைமை அலுவலகப் பிரச்சனை வந்தது இல்லை. எம்ஜிஆர், ஆர்.எம்.வீ உட்பட பல மூத்த அமைச்சர்களை ஒட்டுமொத்தமாக அமைச்சரவையில் இருந்து டிஸ்மிஸ் செய்த போது கூட அதிமுகவில் பிரளயம் ஏற்பட்டது இல்லை. அதன் பிறகு ராணுவ கட்டுப்பாடுடன் இருக்கும் கட்சி என்று சொல்லியதோடு, மட்டுமின்றி செயல்படுத்தியும் காட்டினார் ஜெயலலிதா.
மேலும் செய்திகளுக்கு.. சசிகலாவுடன் இணையும் திவாகரன்..12ம் கட்சி இணைக்கும் விழா - குழப்பத்தில் அதிமுக தொண்டர்கள்!
முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் கடந்த 1972ஆம் ஆண்டு அதிமுக என்ற கட்சியை தொடங்கினார். எம்ஜிஆர் தொடங்கிய அதிமுக தமிழக சட்டமன்றத்தில் ஏழு முறை வெற்றிகரமாக ஆட்சியில் இருந்தது என்பதும் தற்போது தமிழ்நாடு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஒற்றைத்தலைமை மோதலுக்கு மத்தியில் ஓ.பன்னீர்செல்வம் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வந்த போது, அவரது ஆதரவாளர்களுக்கும், ஈபிஎஸ் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது.
ஓபிஎஸ் வாகனம் அவ்வை சண்முகம் சாலை அருகே வருவதை அறிந்து, அங்குள்ள இந்தியன் வங்கி அருகே ஈபிஎஸ் ஆதரவாளர்கள் நூற்றுக்கணக்கானோர் குவிந்தனர். குப்பை தொட்டிகளை சாலையின் குறுக்கே இழுத்து வைத்ததுடன் ஓபிஎஸ் வருகையை கண்டித்து முழக்கமிட்டனர். இதனால் ஓபிஎஸ்-ன் வாகனம் சாலையிலேயே நிறுத்தப்பட்ட நிலையில், நாற்காலிகளை தலைக்கவசமாக பயன்படுத்தி எடப்பாடி பழனிசாமி தரப்பினர் கல் வீச்சிலும் ஈடுபட்டனர்.
பிறகு அங்கு வந்த வருவாய் கோட்டாட்சியர் சாய் வர்தினி உள்ளிட்ட வருவாய் துறை அதிகாரிகள் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை வெளியேறுமாறு அறிவுறுத்தினர். பின்னர், வெளியே வந்த ஓபிஎஸ் சிறிது நேரம் தர்ணாவில் ஈடுபட்டார்.அவர் அங்கிருந்து புறப்பட்டதும், வருவாய்த்துறை அதிகாரிகள் அதிமுக அலுவலகத்திற்கு பூட்டு போட்டு சீல் வைத்தனர். அதிமுக தலைமை அலுவலகம் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 146-ன் கீழ் முடக்கம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு.. அடுத்த பிளான் ரெடி.. தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செல்கிறார் கமல்ஹாசன்.! எதற்கு தெரியுமா?
வில்லங்கம் இருப்பதாக கருதப்படும் சொத்துக்கள் தான் 146 பிரிவின் கீழ் முடக்கப்படும். அந்த வகையில், ஒரு சொத்துக்கு இரு தரப்பினர் சொந்தம் கொண்டாடும் நிலையில் வருவாய் துறை அதிகாரிகளால் முடக்கப்படும்.இதை பின்பற்றியே தற்போது அதிமுக தலைமை அலுவலகம் முடக்கப்பட்டுள்ளது. சீல் வைக்கப்பட்டதை அகற்றுவதற்கு, நீதிமன்றத்தை நாடி தீர்வு காணுவது தான் ஒரே வழி என்று கூறப்படுகிறது.
எம்ஜிஆர் , ஜெயலலிதா காலத்தில் இருந்த அதிமுக இப்போ இப்படி ஆகிருச்சே என்று புலம்புகிறார்கள் அதிமுக தொண்டர்கள். ஒரு வேலை இதற்கு கட்சி சொத்து தான் காரணமா ? என்றும் கேள்வி எழுந்துள்ளது. இந்தியாவில் தேசிய மற்றும் மாநிலக் கட்சிகளின் சொத்து மதிப்பு குறித்து, ஜனநாயகச் சீர்திருத்தங்கள் அமைப்பின் தேர்தல் கண்காணிப்புக் கழகம் ஆய்வு மேற்கொண்டது.
அந்த ஆய்வின்படி 2019-2020 நிதியாண்டில் மாநில மற்றும் தேசிய அளவிலுள்ள கட்சிகளின் சொத்து மதிப்பு எவ்வளவு என்ற அறிக்கையை ஜனநாயகச் சீர்திருத்தங்கள் அமைப்பின் தேர்தல் கண்காணிப்பு கழகம் தற்போது வெளியிட்டிருந்தது. ரூ.267.61 கோடியுடன் அதிமுக மூன்றாவது இடத்திலும் உள்ளன. தமிழக அளவில் அதிமுக தான் முதலிடத்தில் உள்ளது. தமிழகத்தின் ஆளுங்கட்சியான திமுக இந்தப் பட்டியலில் ரூ.184.24 கோடியுடன் 6-வது இடத்தில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு.. ஓ.பன்னீர்செல்வத்துக்கு நாங்க உதவி செஞ்சிருப்போம்.. அமைச்சர் மா.சுப்பிரமணியன் சொன்ன சீக்ரெட்