ஓ.பன்னீர்செல்வத்துக்கு நாங்க உதவி செஞ்சிருப்போம்.. அமைச்சர் மா.சுப்பிரமணியன் சொன்ன சீக்ரெட்
அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.
ஓபிஎஸ் ஆதரவாளர் மீது இபிஎஸ் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதாக புகார் எழுந்துள்ளது. மேலும், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் இபிஎஸ் ஆதரவாளர்களை தாக்கினர். இன்று காலை 9.15 மணியளவில் அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடங்க இருந்த நிலையில், 9 மணி அளவில் சென்னை உயர் நீதிமன்றம், பொதுக்குழு கூட்டம் நடத்துவதற்கு அனுமதி அளித்து தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்புக்கு முன்னதாக ஓ.பன்னீர்செல்வம் அதிமுக தலைமை அலுவலகம் நோக்கி புறப்பட்டார்.
அப்போது, அதிமுக அலுவலகம் அருகே தொண்டர்கள் கல்வீச்சில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது. ஓபிஎஸ்-இபிஎஸ் ஆதரவாளர்கள் இரு தரப்பினரும் எதிர் எதிரே நின்று கொண்டு கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் கார் ஒன்றின் கண்ணாடி உடைக்கப்பட்டது. அங்கே இரு தரப்பினரும் கல்வீசி தாக்கிக் கொண்ட நிலையில், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் கட்சியின் தலைமை அலுவலகத்தின் பூட்டை உடைத்தும், ஆக்ரோஷமாக கதவை உதைத்தும், மோதியும் உடைத்து உள்ளே புகுந்தனர்.
மேலும் செய்திகளுக்கு.. பாஜக கட்சிகாரர் என்றால் கைது செய்வீங்களா? திமுகவை கிழித்த அண்ணாமலை
அதனைத் தொடர்ந்து, ஓபிஸ் தலைமை அலுவலகத்தில் நுழைந்தார். அங்கே கல்வீச்சு, மோதலுக்கு பின் ஓபிஎஸ் ஆதரவாளர்களின் கட்டுப்பாட்டில் அதிமுக தலைமை அலுவலகம் வந்தது. ஓபிஎஸ் ஆதரவாளர்கள் இபிஎஸ் ஆதரவாளர்களை விரட்டியடித்தனர். இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், 'நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தொடர்ச்சியாக பள்ளிக்கல்வித்துறை சார்பில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
நீட் தேர்வை ரத்து செய்வதற்காக தொடர்ச்சியாக அனைத்து முயற்சியையும் தமிழக முதல்வர் எடுத்து வருகிறார். தமிழக ஆளுநரிடமிருந்து நீட் விளக்கு மசோதா குடியரசு தலைவருக்கு சென்றுள்ளது குடியரசுத் தலைவரும் உள்துறை அமைச்சகமும் இணைந்து பேசி ஒரு நல்ல முடிவு எடுத்து அறிவிப்பார்கள் என்று எதிர்பார்ப்பு உள்ளது. இருப்பினும் தற்போது தேர்வு நெருங்கி விட்டது அவர்கள் பள்ளிக்கல்வித் துறை மூலமாக நன்கு பயிற்சி பெற்றுள்ளதால் அதிகளவு மாணவர்கள் தேர்ச்சி பெறுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.
மேலும் செய்திகளுக்கு.. சசிகலாவுடன் இணையும் திவாகரன்..12ம் கட்சி இணைக்கும் விழா - குழப்பத்தில் அதிமுக தொண்டர்கள்!
திமுக அரசு பொறுப்பேற்றவுடன் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை விற்பனை தடுப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.10 பேர் ஒன்று கூடினால் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று சுகாதாரத் துறை ஏற்கனவே அறிவித்துள்ளது.ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க. தலைமை கழகத்திற்கு செல்வது குறித்து முன்கூட்டியே தகவல் தெரிவிக்கவில்லை.
முன்பே பாதுகாப்பு கேட்டிருந்தால் நடவடிக்கை எடுத்திருப்போம். வானகரம் செல்வதற்கு முன்பாக அவ்வை சண்முகம் சாலை தலைமை கழகத்திற்கு செல்வதாக ஓ.பன்னீர் செல்வம் தரப்பினர் முன்கூட்டியே தகவல் தெரிவித்திருந்தால் நடவடிக்கை எடுத்திருக்கலாம்’ என்று கூறினார்.
மேலும் செய்திகளுக்கு.. அடுத்த பிளான் ரெடி.. தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செல்கிறார் கமல்ஹாசன்.! எதற்கு தெரியுமா?