MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Politics
  • Rajini: மீண்டும் ரஜினி அரசியல்.! தேரை இழுத்து தெருவில் விட்ட ஆதவ் அர்ஜுனா.! தலைவர்கள் லேட்டாக கண்டித்ததன் காரணம் இதுதான்.!

Rajini: மீண்டும் ரஜினி அரசியல்.! தேரை இழுத்து தெருவில் விட்ட ஆதவ் அர்ஜுனா.! தலைவர்கள் லேட்டாக கண்டித்ததன் காரணம் இதுதான்.!

ஆதவ் அர்ஜுனா, திமுக மிரட்டலால் ரஜினி அரசியலில் இருந்து பின்வாங்கியதாகக் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு ரஜினி "காலம் பதில் சொல்லும்" என பதிலடி கொடுக்க தமிழக அரசியல் களம் மீண்டும் சூடுபிடித்துள்ளது.

3 Min read
Author : Vedarethinam Ramalingam
Published : Mar 17 2026, 03:17 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
மீண்டும் அரசியல் களத்தில் ரஜினி
Image Credit : Asianet News

மீண்டும் அரசியல் களத்தில் ரஜினி

தமிழக அரசியலில் "சூப்பர் ஸ்டார்" ரஜினிகாந்தின் அரசியல் வருகை என்பது தசாப்த கால விவாதமாக இருந்து, ஒருகட்டத்தில் அவரே அதற்கு முற்றுப்புள்ளி வைத்தார். ஆனால், இப்போது தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) முக்கிய நிர்வாகியான ஆதவ் அர்ஜுனா ஆற்றிய ஒரு உரை, அணைந்து போன நெருப்பை மீண்டும் ஊதிவிட்டுள்ளது.

27
சர்ச்சையின் பின்னணி: தேரை இழுத்து தெருவில் விட்ட ஆதவ்!
Image Credit : Asianet News

சர்ச்சையின் பின்னணி: தேரை இழுத்து தெருவில் விட்ட ஆதவ்!

கடந்த மார்ச் 12-ம் தேதி தவெக நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய ஆதவ் அர்ஜுனா, "ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்து சிஸ்டத்தை மாற்ற விரும்பினார். ஆனால் திமுக கொடுத்த மிரட்டல்களால் அவர் பின்வாங்கிவிட்டார். அந்த மிரட்டல்களைச் சமாளிக்கும் மனவலிமை விஜய்க்கு மட்டுமே உள்ளது" என்று பேசினார்.

ரஜினியைப் புகழ்வது போலத் தொடங்கி, மறைமுகமாக அவரை 'மனவலிமை அற்றவர்' என்றும், 'திமுகவின் மிரட்டலுக்குப் பயந்தவர்' என்றும் ஆதவ் அர்ஜுனா சித்தரித்தது ரஜினி ரசிகர்கள் மற்றும் அரசியல் வட்டாரத்தில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ரஜினி அமைதியாக ஒதுங்கியிருந்த நிலையில், வீணாக அவரை வம்புக்கு இழுத்து, ஒரு பெரிய அரசியல் விவாதத்தை ஆதவ் அர்ஜுனா தொடங்கி வைத்துள்ளார்.

Related Articles

Related image1
விஜய்–த்ரிஷாவுக்கு கல்யாணம்? த்ரிஷா அம்மா கொடுத்த சிக்னல்.. கிளம்பிய புது சர்ச்சை
Related image2
இரட்டை இலை சின்னத்தில் ஜெ.தீபா.?! எடப்பாடி பழனிசாமியின் 'மாஸ்டர் பிளான்' பலிக்குமா?
37
தலைவர்கள் 'லேட்டாக' எதிர்வினை ஆற்றியது ஏன்?
Image Credit : Asianet News

தலைவர்கள் 'லேட்டாக' எதிர்வினை ஆற்றியது ஏன்?

ஆதவ் அர்ஜுனா பேசி சில நாட்களுக்குப் பிறகுதான் எடப்பாடி பழனிசாமி (அதிமுக), அண்ணாமலை, நயினார் நாகேந்திரன் (பாஜக), அன்புமணி ராமதாஸ் (பாமக) போன்ற தலைவர்கள் கண்டன அறிக்கைகளை வெளியிட்டனர். இந்தத் தாமதத்திற்குப் பின்னால் சில முக்கிய அரசியல் காரணங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது:தவெக ஒரு வளர்ந்து வரும் கட்சி. அதன் முக்கிய நிர்வாகி ஒருவர் பேசியதற்கு அந்தக் கட்சியின் தலைவர் விஜய் என்ன எதிர்வினை ஆற்றுகிறார் என்பதைப் பார்க்க மற்ற தலைவர்கள் முதலில் காத்திருந்தனர். ஆனால் விஜய்யிடமிருந்து மௌனம் மட்டுமே பதிலாக வந்ததால், தலைவர்கள் களமிறங்கினர். 

47
"காலம் பதில் சொல்லும்"
Image Credit : Asianet News

"காலம் பதில் சொல்லும்"

ரஜினி தரப்பிலிருந்து என்ன பதில் வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ரஜினி "காலம் பதில் சொல்லும்" என்று பதிலடி கொடுத்த பிறகே, அவருக்கு ஆதரவாகப் பேசுவது அரசியல் ரீதியாகச் சரியாக இருக்கும் எனத் தலைவர்கள் கருதினர்.ரஜினிக்குத் தமிழகம் முழுவதும் கட்சி கடந்த ரசிகர்கள் உள்ளனர். அவர்களைப் பகைத்துக் கொள்ளக் கூடாது என்பதற்காகவும், அதே சமயம் தவெக-வின் அதீத வளர்ச்சியைக் கட்டுப்படுத்தவும் ஒருமித்த குரலில் NDA மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

57
ரஜினியின் "சிக்ஸர்" பதிலடி!
Image Credit : Facebook

ரஜினியின் "சிக்ஸர்" பதிலடி!

வழக்கம் போல் தனது பாணியில் சுருக்கமாகவும், ஆணித்தரமாகவும் பதிலளித்த ரஜினிகாந்த், "காலம் பேசாது, ஆனால் காத்திருந்து பதில் சொல்லும்" என்று தெரிவித்துள்ளார். மேலும், தனக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த ஈபிஎஸ், அண்ணாமலை, திருமாவளவன், எல். முருகன் எனப் பல அரசியல் தலைவர்களுக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.இது ஒருபுறம் ரஜினியின் பண்பைக் காட்டினாலும், மறுபுறம் அவர் இன்னும் அரசியலில் ஒரு “செல்வாக்கு மிக்க சக்தியாக” நீடிக்கிறார் என்பதையே காட்டுகிறது.

67
அரசியல் களம் சூடுபிடிக்குமா?
Image Credit : instagram

அரசியல் களம் சூடுபிடிக்குமா?

ஆதவ் அர்ஜுனாவின் இந்தப் பேச்சு, ரஜினி ரசிகர்களுக்கும் விஜய் ரசிகர்களுக்கும் இடையே ஒரு தேவையற்ற மோதலை உருவாக்கியுள்ளது. ரஜினியை அரசியலில் இருந்து ஒதுங்கவிட்டாலும், அவரைப் பற்றிய விவாதங்கள் இன்னும் ஓய்ந்தபாடில்லை. 'தேரை இழுத்து தெருவில் விட்ட' கதையாக, அமைதியாக இருந்த ரஜினி ரசிகர்களை மீண்டும் அரசியல் களத்திற்குள் இழுத்து வந்துவிட்டது தவெக-வின் இந்தப் பேச்சு. இதன் தாக்கம் வரும் தேர்தல்களில் எதிரொலிக்குமா அல்லது ரஜினி சொன்னது போல "காலம்" இதற்குத் தகுந்த பதில் சொல்லுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

77
காலத்தின் கையில் பதில்!
Image Credit : X

காலத்தின் கையில் பதில்!

தமிழக அரசியலில் ரஜினிகாந்த் என்பவர் வெறும் நடிகர் மட்டுமல்ல, அவர் ஒரு சகாப்தம். அவர் அரசியலுக்கு வராதது ஒரு தரப்பினருக்கு ஏமாற்றமாக இருந்தாலும், அவர் இப்போதும் ஒரு "அசைக்க முடியாத சக்தியாக" மதிக்கப்படுகிறார் என்பதற்கு ஆதவ் அர்ஜுனாவின் பேச்சுக்குக் கிளம்பிய எதிர்ப்புகளே சாட்சி.

ஆதவ் அர்ஜுனா தனது கட்சித் தலைவரை முன்னிலைப்படுத்த ரஜினியை ஒரு கருவியாகப் பயன்படுத்த நினைத்தது, தற்போது அவருக்கே 'பூமராங்' ஆகத் திரும்பியுள்ளது. அரசியல் முதிர்ச்சியின்றிப் பேசப்படும் வார்த்தைகள், ஒரு கட்சியின் நற்பெயரைக் காட்டிலும் தேவையற்ற சர்ச்சைகளையே அதிகம் உருவாக்கும் என்பதை இந்தச் சம்பவம் உணர்த்துகிறது. எப்போதும் போல் அவதூறுகளைத் தாண்டி ரஜினி தனது மௌனத்தின் மூலமே பெரும் வெற்றியைப் பெற்றுள்ளார். தலைவர்கள் தாமதமாகக் கண்டித்தாலும், ரஜினியின் மீதான மரியாதை கட்சி எல்லைகளைத் தாண்டியது என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணமாகியுள்ளது. இனிவரும் காலங்களில், புதிய கட்சிகள் தங்களை நிலைநிறுத்திக்கொள்ள பழைய ஆளுமைகளைச் சிறுமைப்படுத்துவதை விட, தங்கள் கொள்கைகளால் மக்களைச் சென்றடைவதே புத்திசாலித்தனமாக இருக்கும். ஆனால் அந்த விமர்சனத்தில் இருக்கும் உண்மையையும் விளங்கிக்கொள்ள வேண்டும்ரஜினி ரசிகர்கள்.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
விஜய் (நடிகர்)
ரஜினிகாந்த்
ரஜினிகாந்த்
Latest Videos
Recommended Stories
Recommended image1
டிரம்பின் விபரீத விளையாட்டு..! ஈரான் வலையில் சிக்கிய அமெரிக்கா..! கைவிட்ட அரபு நாடுகள்..!
Recommended image2
ஸ்டாலினுக்கு 13 மார்க். பெற்றோரும், தாய்மார்களும் மன்னிக்கக்கூடாது…! அன்புமணி ஆவேசம்
Recommended image3
அரசியல் முடிவில் பின்வாங்கியது ஏன்..? ஆதவ் அர்ஜூனாவின் கருத்தால் கடும் கோபத்தில் ரஜினி பரபரப்பு அறிக்கை..
Related Stories
Recommended image1
விஜய்–த்ரிஷாவுக்கு கல்யாணம்? த்ரிஷா அம்மா கொடுத்த சிக்னல்.. கிளம்பிய புது சர்ச்சை
Recommended image2
இரட்டை இலை சின்னத்தில் ஜெ.தீபா.?! எடப்பாடி பழனிசாமியின் 'மாஸ்டர் பிளான்' பலிக்குமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved