ஐ.டி ரெய்டில் மாட்டிய 500 கோடி.. சிக்கிய எடப்பாடியின் உறவினர் & வேலுமணியின் நண்பர்.!
அதிமுகவை சேர்ந்த சந்திரசேகர், ஒப்பந்ததாரர் செய்யாதுரை தொடர்புடைய இடங்களில் நடைபெற்ற ரெய்டில் 500 கோடி கணக்கில் வராத வருமானம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கோவை வடவள்ளியில் உள்ள தொண்டாமுத்தூர் சாலை, நாராயணசாமி நகரைச் சேர்ந்தவர் சந்திரசேகர். இவர், முன்னாள் அமைச்சரும், அதிமுக கொறடாவுமான எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கமானவர். வரி ஏய்ப்பு தொடர்பாக, வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த 6-ம் தேதி முதல் சந்திரசேகர் வீடு உள்ளிட்ட 6 இடங்களில் சோதனை நடத்தினர்.
பீளமேடு கொடிசியா வர்த்தக மையம் அருகேயுள்ள அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்திலும் சோதனை நடைபெற்றது. முன்னாள் அமைச்சரும், அதிமுக கொறடாவுமான எஸ்.பி.வேலுமணியின் உதவியாளர் சந்தோஷ். இவரது சகோதரர் வசந்தகுமார். இவரது வீடு குனியமுத்தூரில் உள்ளது.
மேலும் செய்திகளுக்கு.. அதிமுக கட்சிக்கு இத்தனை கோடி சொத்து? எப்படி இருந்த கட்சி.. குமுறும் அதிமுக தொண்டர்கள்.!
இவரது வீடு மட்டுமின்றி எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமானவரான ஒப்பந்ததாரர் செய்யாதுரை தொடர்புடைய வீடு மற்றும் அலுவலகங்களிலும் சோதனை நடைபெற்றது. விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்தவர் செய்யாத்துரை. இவரும் இவரது மகன் நாகராஜனும் இணைந்து நடத்திவரும் எஸ்பிகே குழுமமானது, தமிழக அரசின் சாலை ஒப்பந்தப் பணிகள் மற்றும் கட்டுமானப் பணிகளைச் செய்து வருகிறது.
இவர் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சம்மந்திக்கு நெருக்கமானவர் என்று கூறப்படுகிறது. கடந்த 2018-ம் ஆண்டு எஸ்.பி.கே குழுமத்துக்கு சொந்தமான வீடு, அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அந்தச் சோதனையின்போது 150 கோடி ரூபாய் வரையிலான பணமும், தங்க நகைகளும் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகியது.
மேலும் செய்திகளுக்கு.. கயல் சீரியலில் வரும் கயல் தான் சின்னம்மா.. மேடையில் கண்ணீர் விட்ட திவாகரன் - சசிகலா !
இந்நிலையில் அதிமுக நாளிதழ் வெளியீட்டாளர் சந்திரசேகர், ஒப்பந்ததாரர் செய்யாதுரை தொடர்புடைய இடங்களில் ரெய்டு ரூ.500 கோடி கணக்கில் வராத வருமானம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளது. வருமான வரித்துறை சோதனையில் எடப்பாடியின் உறவினரும், வேலுமணியின் நண்பரும் சிக்கியுள்ளது அரசியல் வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் செய்திகளுக்கு.. முடக்கப்படும் அதிமுக வங்கி கணக்கு? வங்கிகளுக்கு மாறிமாறி கடிதம் எழுதிய ஓபிஎஸ், இபிஎஸ்.!