கயல் சீரியலில் வரும் கயல் தான் சின்னம்மா.. மேடையில் கண்ணீர் விட்ட திவாகரன் - சசிகலா !

சசிகலாவின் அண்ணன் திவாகரன் தனது அண்ணா திராவிட கழகத்தை சசிகலாவுடன் இணைக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

Sasikala brother Divakaran joined his Anna Dravida Kazhagam with Sasikala

சென்னை வானகரம் ஸ்ரீவாரு மண்டபத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டம் நேற்று நடந்தது. அதிமுக பொதுக்குழுவில் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொதுக்குழுவில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனிடையே இறுதியாக உயர் நீதிமன்றத்தை நம்பி இருந்த ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு, நீதிமன்ற தீர்ப்பும் சாதகமாக அமையவில்லை. 

இதனால் கட்சி அலுவலகமான ராயப்பேட்டை அலுவலகத்துக்கு தனது ஆதரவாளர்கள் புடை சூழ சென்றார். அங்கு ஏற்கனவே இருந்த எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களுக்கும், அப்போது சென்ற ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியே கலவரமாக காட்சியளித்தது. அதிமுகவினர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Sasikala brother Divakaran joined his Anna Dravida Kazhagam with Sasikala

மேலும் செய்திகளுக்கு.. சசிகலாவுடன் இணையும் திவாகரன்..12ம் கட்சி இணைக்கும் விழா - குழப்பத்தில் அதிமுக தொண்டர்கள்!

அதிமுகவில் உட்கட்சி பூசல் வெடித்துள்ள இந்நிலையில் சசிகலாவின் அண்ணன் திவாகரன் தனது அண்ணா திராவிட கழகத்தை சசிகலாவுடன் இணைப்பதாக நேற்று அறிவித்தார். அதன்படி, திவாகரனின் கட்சி இணைப்பு விழா தஞ்சையில் இன்று நடைபெற்றது. இந்த விழாவில் சசிகலாவின் கட்சியுடன், திவாகரன் அண்ணா திராவிடர் கழகத்தை இணைத்து கொண்டார். 

கடந்த 2018-ம் ஆண்டு சசிகலா சகோதரர் திவாகரன் அண்ணா திராவிடர் கழகம் என்ற பெயரில் கட்சியை தொடங்கினார்.ஆனால், அக்கட்சியில் தனது பெயரையோ,படத்தையோ பயன்படுத்தக்கூடாது என சசிகலா வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார்.இதைத்தொடர்ந்து,சசிகலா இனி தனது சகோதரி இல்லை’ என திவாகரன் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளுக்கு.. அடுத்த பிளான் ரெடி.. தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செல்கிறார் கமல்ஹாசன்.! எதற்கு தெரியுமா?

Sasikala brother Divakaran joined his Anna Dravida Kazhagam with Sasikala

சசிகலா முன்னிலையில் கண்ணீருடன் மேடையில் பேசிய திவாகரன், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சசிகலாவுக்கு அமைச்சர் பதவி வழங்கி அழகு பார்க்க ஆசைப்பட்டார். சசிகலா நினைத்திருந்தால் ஜெயலலிதா இருக்கும் போதே கட்சியில் ஒரு பதவியை பெற்றிருக்கலாம். ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட்டு இருக்கலாம். 

ஆனால் சசிகலா அதனை விரும்பவில்லை. ஜெயலலிதாவின் உடல் நலனில் மட்டுமே அக்கறை கொண்டவராக சசிகலா இருந்தார்.கயல் சீரியலில் வரும் கயல் எப்படியோ? அது போல் தான் சின்னம்மா. தமிழகம் முழுவதிலிருந்து 2500க்கும் மேற்பட்ட இயக்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் சசிகலாவோடு இணைய உள்ளனர்’ என்று கூறினார். திவாகரன் அழுததை பார்த்த சசிகலாவும் அழுக சில நிமிடங்கள் அமைதியானது விழா மேடை.

மேலும் செய்திகளுக்கு.. அதிமுக கட்சிக்கு இத்தனை கோடி சொத்து? எப்படி இருந்த கட்சி.. குமுறும் அதிமுக தொண்டர்கள்.!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios