டிஐஜி விஜயகுமார் தற்கொலைக்கு இதுதான் காரணமா? பரவும் புரளி செய்தி!!
கோவை சரக டிஐஜி விஜயகுமார் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக புரளியான செய்தி ஒன்று வைரலாகி வருகிறது.

நீட் தேர்வில் மகள் குறைவான மதிப்பெண் பெற்றதால் கோவை சரக டிஐஜி விஜயகுமார் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக புரளியான செய்தி ஒன்று வைரலாகி வருகிறது.
தேனி மாவட்டம் போடி அருகே உள்ள அணைக்கரைபட்டியை சேர்ந்தவர் விஜயகுமார் (46). இவர், கடந்த 2009-ம் ஆண்டு ஐ.பி.எஸ். அதிகாரி ஆனார். இதனையடுத்து, காஞ்சிபுரம், கடலூர், நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்ட கண்காணிப்பாளராக பணியாற்றியுள்ளார். சென்னையில் அண்ணா நகர் துணை ஆணையராக பணியாற்றி வந்தவருக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டு கடந்த ஜனவரி மாதம் 6ம் தேதி கோவை சரக காவல்துறை துணைத் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
இதையும் படிங்க;- கோவை சரக டிஐஜி விஜயகுமார் FIR வெளியானது! தற்கொலைக்கு இதுதான் காரணம்! அதிர்ச்சி தகவல்!
இவரது அலுவலகம் கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் இருக்கிறது. முகாம் அலுவலகம் (வீடு) ரெட்பீல்டு பகுதியில் உள்ளது. இந்த வீட்டில் தான் டி.ஐ.ஜி. விஜயகுமார், தனது மனைவி கீதாவாணி (42), மகள் நந்திதா (18) ஆகியோருடன் தங்கி வந்தார். இந்நிலையில், நேற்று காலை நடைபயிற்சி முடித்துவிட்டு கோவையில் உள்ள முகாம் அலுவகம் வந்தவர் பாதுகாவலரின் துப்பாக்கியை வாங்கி திடீரென தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், அவரது தற்கொலை தொடர்பாக பல்வேறு வதந்திகள் பரவி வரும் நிலையில் தற்போது செய்தி வைரலாகி வருகிறது. அதில், தனது ஒரே மகளான நந்திதாவை டாக்டராக்க வேண்டும் என்று டி.ஐ.ஜி. விஜயகுமார் ஆசைப்பட்டுள்ளார். ஆகையால், நீட் தேர்வில் மகள் வெற்றி பெற வேண்டும் என்று அவரை தீவிரமாக படிக்க வைத்தார். ஆனால், நீட் தேர்வில் மகள் மிக குறைவான மதிப்பெண் எடுத்ததால் மனக்குழப்பத்தில் இருந்து வந்துள்ளார்.
நீட் தேர்வில் குறைவான மதிப்பெண் வாங்கிய மகளை எப்படி மருத்துக்கல்லூரியில் சேர்ப்பது என்ற கவலையை தனது நண்பர்களிடம் தெரிவித்ததாகவும், இதனால், மனஉளைச்சலுக்கு ஆளான விஜயகுமார் சரியாக தூங்காமல் இருந்து வந்தாகவும், இதன் காரணமாக பாதுகாவலர் ரவியிடம் இருந்த துப்பாக்கியை வாங்கி டிஐஜி விஜயகுமார் தற்கொலை செய்து கொண்டதாக புரளியான செய்தி உலா வந்து கொண்டிருக்கிறது.
இதையும் படிங்க;- Power Shutdown in Chennai: சென்னையில் இந்த பகுதிகளில் இன்று பவர் கட்! எத்தனை மணிநேரம் தெரியுமா?
ஆனால், உண்மை என்னவென்றால் நீண்ட நாட்களாக இரவில் சரியான தூக்கம் இல்லாததால் டிஐஜி விஜயகுமார் மருத்துவர்கள் ஆலோசனைப்படி தூக்க மாத்திரை எடுத்துக்கொண்டு வந்ததாகவும், மனஉளைச்சல் அதிகரிக்கவே துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.