சுதந்திர தின தமிழக அரசு விருதுகள் யாருக்கெல்லாம் தெரியுமா.? வெளியான அறிவிப்பு

தமிழக சுதந்திர தின விழாவில் சிறந்த மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தனுக்கு தகைசால் விருதும், சந்திராயன் -3 திட்ட இயக்குனர் வீரமுத்துவேலுக்கு டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.

The Tamil Nadu Government Independence Day Awards have been announced KAK

தமிழக அரசின் சுதந்திர தின கொண்டாட்டம்

தமிழக அரசு சார்பாக சுதந்திர தின கொண்டாட்டம் நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் கொடியேற்றிவைக்கவுள்ளார். முன்னதாக முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்கிறார். இந்த நிகழ்வில் உயர்நீதிமன்ற நீதிபதிகள், அமைச்சர்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டுள்ளார். சுதந்திர தினத்தையொட்டி தமிழக அரசு சார்பாக விருதுகள் வழங்கி கவுரவிக்கப்படும் அந்த வகையில் இந்தாண்டு முதலமைச்சரின் சிறந்த உள்ளாட்சி அமைப்புகளில் சிறந்த மாநகராட்சி. நகராட்சி, பேருராட்சிக்கு விருது வழங்கப்படுகிறது. சிறந்த மாநகராட்சியாக கோவையும்,  சிறந்த நகராட்சியாக திருவாரூரும்,  சிறந்த பேரூராட்சியாக கோவை மாவட்டத்தில் உள்ள சூலூர் பேரூராட்சி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை மாநகராட்சியில் உள்ள 14வது மண்டலம் சிறந்த மண்டலமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது 

அண்ணாமலைக்கு அன்போடு போன் போட்ட ஸ்டாலின்.! உடனே ஓகே சொன்ன பாஜக

கல்பனா சாவ்லா விருது

அடுத்ததாக  தமிழக அரசு சார்பாக கடந்த 3ஆண்டு காலமாக வழங்கப்பட்டு வரும் தகைசால் விருது, இந்த ஆண்டு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரி அனந்தனுக்கு வழங்கப்படுகிறது. துணிவு மற்றும் சாகசச் செயலுக்கான கல்பனா சாவ்லா விருது- வயநாடு நிலச்சரிவின் போது துணி்ச்சலாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளித்த கூடலூரைச் சேர்ந்த செவிலியர் சபீனாவுக்கு துணிவு மற்றும் சாகசத்துக்கான கல்பனா சாவ்லா விருது வழங்கப்படுகிறது.டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் விருது இஸ்ரோவின் சந்திராயன் -3 விண்கல திட்ட இயக்குனர் பி.வீரமுத்துவேலுக்கு வழங்கப்படுகிறது.

நல்லாளுமை விருதுகள்  யாருக்கு.?

இதேபோல நல்லாளுமை விருதுகளை, முதல்வரின் முகவரித்துறை அலுவலர் , 4 ஐஏஎஸ் அதிகாரிகள், ஒரு மருத்துவர் ஆகியோருக்கு பல்வேறு பிரிவுகளில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் வழங்குகிறார். முதல்வரின் முகவரித்துறையின், தலைமை தொழில்நுட்ப அலுவலர் த.வனிதா, உறுப்பு மாற்றுசிகிச்சை திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணைய உறுப்பினர் செயலர் ந.கோபால கிருஷ்ணன், உயர்கல்வியில் மாணவர்கள் சேர்க்ககையை விகிதத்தை கணிசமாக உயர்த்தியதற்காக விருதுநகர் ஆட்சியர் வீ.ஜெயசீலன், உலகின் சிறந்த நூல்களை தமிழில் மொழிபெயர்க்கவும் வழிவகை செய்ததற்காக பொது நூலககங்கள் துறை இயக்குனர் க.இளம்பகவத் ஆகியோருக்கு நல்லாளுமை விருது வழங்கப்படுகிறது. 

Special Train : கோவை, நெல்லைக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு.! முன்பதிவு தொடங்கியதா.?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios