அண்ணாமலைக்கு அன்போடு போன் போட்ட ஸ்டாலின்.! உடனே ஓகே சொன்ன பாஜக
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்ளுமாறு முதலமைச்சர் ஸ்டாலின் அழைப்பு விடுத்ததையடுத்து, அண்ணாமலை பங்கேற்க இருப்பதாக அறிவித்துள்ளார்.
கருணாநிதி ஆட்சி கால திட்டங்கள்
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி 50ஆண்டுகளுக்கு மேலாக திமுக தலைவராகவும் 5 முறை தமிழக முதலமைச்சராகவும் சிறப்பாக பணியாற்றியுள்ளார். இவரது ஆட்சி காலத்தில் பல்வேறு மக்கள் நில திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டுள்ளது. கருணாநிதி ஆட்சி காலத்தில் கை ரிக்ஷா ஒழிப்புத்திட்டம், பிச்சைக்காரர்கள் மறுவாழ்வுத்திட்டம், எல்லா மாவட்டங்களிலும் அரசு மருத்துவமனைகள், மகளிர் சுயஉதவிக் குழுக்கள் அமைத்தது, அரசுப் பணிகளில் பெண்களுக்கு 30 விழுக்காடு இட ஒதுக்கீட்டை அளித்தது, விதவைகளுக்கு மறுமண உதவித் திட்டம், இட ஒதுக்கீடு என அவரது ஆட்சி காலத்தில் பல்வேறு சாதனைகள் நிகழ்த்தப்பட்டது.
கருணாநிதி நூற்றாண்டு
உடல்நிலை பாதிக்கப்பட்டவர் கடந்த 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் காலமானார். அவரது மறைவையடுத்து திமுக தலைவராக பொறுப்பேற்ற ஸ்டாலின், அடுத்த 3 ஆண்டுகளில் தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தை பிடித்து முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். இவரது தலைமையில் தமிழக அரசு செயல்பட்டு வரும் நிலையில் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு நாயணம் வெளியிடப்படுகிறது இதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதனையடுத்து வருகிற ஞாயிற்றுக்கிழமை சென்னையில் நடைபெறவுள்ள விழாவில் மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் கலந்து கொள்ளவுள்ளார்.
Karunanidhi
நாணய வெளியீட்டு விழா- பாஜக பங்கேற்பு
இதனையடுத்து இந்த நிகழ்வில் கலந்து கொள்ள தமிழக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு கால சாதனையாக 100 ரூபாய் நாணயம் வெளியிட வேண்டும் என மாநில அரசு மத்திய அரசிடம் அனுமதி கேட்டிருந்தார்கள். மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ளார்கள்.
தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் குஷ்பு: காரணம் இதுதான்!!
அண்ணாமலையை அழைத்த ஸ்டாலின்
இந்த நிகழ்வில் பங்கேற்கும்படி முதலமைச்சர் ஸ்டாலின் அன்போடு தொலைபேசியில் மூலம் என்னை அழைத்திருந்தார். மேலும் திமுக தலைமை நிலைய செயலாளர் பூச்சி முருகன் பாஜக அலுவலகத்திற்கு வந்த அழைப்பிதழ் கொடுத்திருந்தார். இதனை பாஜக அரசியலாக பார்க்கப்போவதில்லை. கருணாநிதி ஐயாவிற்கு கிடைக்க வேண்டிய மரியாதை கிடைக்க வேண்டும். எனவே இந்த நிகழ்வில் பாஜக பங்கேற்கிறது. மத்திய இணை அமைச்சர் எல். முருகன் கலந்து கொள்ளவுள்ளார். நானும் இந்த விழாவில் பங்கேற்கிறேன் என் தெரிவித்தார்.