Special Train : கோவை, நெல்லைக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு.! முன்பதிவு தொடங்கியதா.?
ரயில்களில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கொச்சுவேலி மற்றும் நெல்லையில் இருந்து பெரம்பூர் வழியாக சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. இதற்கான முன்பதிவு தொடங்கியுள்ளது. .
ரயில்களில் கூட்ட நெரிசல்
ரயில்களில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் ரயில்வே துறை சார்பாக பல்வேறு சிறப்பு ரயில்கள் இயக்கி வருகிறது. வேளாங்கண்ணி கோயிலுக்கு பல்வேறு இடங்களில் இருந்து ரயில் இயக்கப்படுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதே போல சுதந்திர தினத்தையொட்டி அதிகளவு மக்கள் வெளியூர் செல்வார்கள். இதனால் தமிழகத்தில் நெல்லை, நாகர்கோவில் ஆகிய பகுதிகளுக்கு சிறப்பு ரயில் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டது.
கொச்சுவேலி டூ பாட்னா
இந்தநிலையில் கேரள மாநிலம் கொச்சிவேலியில் இருந்து பாட்னாவிற்கு சிறப்பு ரயிலானது இயக்கப்படுகிறது, இந்த ரயில் கொச்சிவேலியில் இருந்து ஆகஸ்ட் 18ஆம் தேதி இரவு 7 மணிக்கு புறப்படுகிறது. ( ரயில் எண் 06111) இந்த ரயில் கொல்லம், கோட்டயம், பாலக்காடு, கோயம்பத்தூர், ஈரோடு, காட்பாடி, பெரம்பூர், வழியாக பாட்னா சென்றடைகிறது. இந்த ரயிலில் முன்பதிவு செய்யப்பட்ட 9 பெட்டிகளும், முன்பதிவு செய்யப்படாத 7 பெட்டிகளும் இணைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லை டூ பாட்னா
இதே போல திருநெல்வேலியில் இருந்து பாட்னாவிற்கு மற்றொரு சிறப்பு ரயிலானது இயக்கப்படுகிறது. ஆகஸ்ட் 17ஆம் தேதி ( ரயில் எண் 06112) இயக்கப்படுகிறது. திருநெல்வேலியில் இருந்து இரவு 9:45 மணிக்கு இந்த ரயில் புறப்படுகிறது. இந்த சிறப்பு ரயிலானது திருநெல்வேலி, கோவில்பட்டி, விருதுநகர், மானாமதுரை, சிவகங்கை, திருச்சிராப்பள்ளி, விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், அரக்கோணம், பெரம்பூர் வழியாக பாட்னாவிற்கு சென்று சேருகிறது இந்த ரயில்களுக்கான முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளதாகவும் ரயில்வே துறை அறிவித்துள்ளது.
இந்த 18 மாவட்டங்களில் இன்று பிச்சு ஊதரப்போகுதாம் கனமழை.. வானிலை மையத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!