Asianet News TamilAsianet News Tamil

அரசியல் மேடைகளில் பேசுவது போல் சபை நாகரீகம் இல்லாமல் பேச வேண்டாம்.! பாஜகவை திட்டிய அமைச்சரிடம் சீறிய அப்பாவு

தமிழக சட்டப்பேரவையில் பாஜகவை கடுமையாக விமர்சித்து பேசிய அமைச்சர் மனோ தங்கராஜை சபாநாயகர் அப்பாவு கண்டித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

The Speaker rebuked the Minister saying that he should not speak in the Assembly like he does on political platforms kak
Author
First Published Jun 23, 2024, 8:17 AM IST

பாஜகவை விளாசிய அமைச்சர்

சட்டப் பேரவை மானியக் கோரிக்கை மீதான விவாதம் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வருகிறது. நேற்று மாலை பால்வளத்துறை விவாதத்திற்கு பதில் உரை அளித்த அமைச்சர் மனோ தங்கராஜ், தனது துறை மீதான கேள்விகளுக்கு விளக்கம் பதில் அளிக்காமல் பாஜகவிற்கு எதிராக பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தார். 2024 தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தேர்தல். 400  தொகுதிகளுக்கு மேல் கைப்பற்றுவோம் இந்த நாட்டைப் பிடிப்போம்.

இந்த நாட்டினுடைய  பெயர் இந்தியா என்பதை மாற்றுவோம் அரசியலமைப்பு சட்டத்தை மாற்றுவோம் ஆட்சியைப் பிடிப்பதற்கு என்னென்ன வழிகள் உண்டோ அவற்றை எல்லாம் கையில் எடுத்து தன்னாட்சி அதிகாரம் பெற்ற அமைப்புகளான அமலாக்கத்துறை வருமானவரித்துறை சிபிஐ போன்ற அமைப்புகள் எல்லாம் எதிர்க்கட்சிகள் மீது ஏவி விடுகின்றனர்.. என்று அமைச்சர் மனோ தங்கராஜ் பேசி கொண்டிருந்தார்.

TN BJP: மணல் கடத்தல் கும்பலிடம் 80 கோடி சுருட்டிய பாஜக? குண்டை தூக்கி போடும் திருச்சி சூர்யா

The Speaker rebuked the Minister saying that he should not speak in the Assembly like he does on political platforms kak

எச்சரிக்கை விடுத்த சபாநாயகர்

மனித வள மேம்பாட்டில் இந்தியா 142 வது இடம், பொய் பிராச்சாரங்களில் இந்தியா முதல் இடம் என மனோ தங்கராஜ் பேசி கொண்டிருக்க உடனே  பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் குறுக்கிட்டார். உடனே குறுக்கிட்ட சபாநாயகர் அப்பாவு அரசியல் மேடையில் பேசுவது போல் இங்கே பேச வேண்டாம். மூத்த அமைச்சர்கள் அணைவருக்கும் அரசியல் பேச நிறைய பாயிண்டுகள் இருக்கு. இருந்த போதும் துறையின் கருத்துக்களை தாண்டி பேசவில்லை.

நீங்களும் தேவையில்லாமல் சபை  நாகரீகத்தை தாண்டி பேச வேண்டாம். பொய் என்ற வார்த்தையை பயன்படுத்த வேண்டாம். நீங்கள் பேசியது அவை குறிப்பில் இடம் பெறாது என்று அமைச்சர் மனோ தங்கராஜை கண்டித்தார். இதனால் தமிழக சட்டப்பேரவையில் சிறிது நேரம் பதற்றமான சூழல் உருவானது. 

மரணத்திலும் அரசியல் செய்யும் இபிஎஸ்! முதல்வரை பாராட்ட வேண்டாம்! குறை சொல்லாமல் இருக்கலாம் இல்ல! ரஞ்சன் குமார்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios