தூத்துக்குடி போராட்டக்காரர்களை வேட்டையாடிய காவலர் சுடலைக்கண்ணு..! 17 ரவுண்ட் சுட்டது ஏன்.? அறிக்கையில் தகவல்

காட்டில் வேட்டையாடுவது போல் காவலர் சுடலைக்கண்ணு துப்பாக்கியால் சுட்டுள்ளார். தூத்துக்குடி காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டதால் 17 ரவுண்டுகள் சுட்டேன் என்று சுடலைக்கண்ணு தெரிவித்தார். ஆனால், 9 ரவுண்டுகள் தான் சுடச் சொன்னதாக தூத்துக்குடி காவல் கண்காணிப்பாளர் கூறியுள்ளார் என சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The report regarding the Thoothukudi gun incident was filed in the Tamil Nadu Legislative Assembly

தூத்துக்குடி துப்பாக்கி சூடு

2018 ஆம் ஆண்டு ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி நடைபெற்ற போராட்டத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தின் விசாரணை அறிக்கை சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், காவல்துறை செய்யத்தகாதவற்றை செய்து, நிச்சயமாக வரம்பை மீறி உள்ளதாக தெரிவித்துள்ளது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு உள்ளே இறந்த 5 பேர்களின் கைகளில் எந்த ஆயுதமும் இல்லை. முதல் துப்பாக்கி சூடு நடைபெற்று உயிரிழப்பு ஏற்பட்ட பின்பு தான் மாவட்ட ஆட்சியர் வளாகத்துக்குள்ளே முதல் வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது.

மாறாக தீ வைக்கப்பட்ட பின்பு துப்பாக்கி சூடு நடைபெறவில்லை. துப்பாக்கி சூடு நடைபெறும் போது கடைபிடிக்க வேண்டிய படிப்படியான அணுகுமுறையை இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் கையாளப்படவில்லை. தப்பி ஓடிய போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி சூடு பிரயோகம் செய்திருப்பது, அவர்கள் பின்மண்டையில் குண்டு புகுந்து முன்பகுதியில் வெளியேறியதன் மூலம் தெரியவந்தது. இறந்தவர்கள் அனைவருக்கும் இடுப்புக்கு மேல் தான் காயம். காவலர்களுக்குள் கூட்டு ஒருங்கிணைப்பு இல்லை என தெரிவந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ஜெயலலிதா மரணம்..! சசிகலா, விஜயபாஸ்கர் குற்றம் செய்துள்ளனர்.! சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் தகவல்

The report regarding the Thoothukudi gun incident was filed in the Tamil Nadu Legislative Assembly

பொதுமக்களை வேட்டையாடிய சுடலை

டி ஐ ஜி மற்றும் உதவி எஸ்பி உத்தரவிட்ட துப்பாக்கி சூடு ஐ.ஜி.க்கு கூட தெரியவில்லை, ஐ ஜி மாவட்ட ஆட்சியர் வளாகத்துக்குள்ளே இருந்தும் டி ஐ ஜி தானாகவே துப்பாக்கி சூடு நடத்தி உள்ளார். உளவுத்துறை எச்சரித்திருந்த போதும் அதற்கேற்ற உத்திகளை மேற்கொள்ளாதது ஐ ஜி.யின் தவறு என தெரிவிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கி சூட்டால் இறந்தவர்கள் குறித்து ஆங்காங்கே நின்று சிலாகித்துக் கொண்டிருந்தவர்கள் மீது எஸ்.பி. துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார். சுடலைக்கண்ணு  என்ற Shooterகாவலர், அபாயகரமான துப்பாக்கியைக் கொண்டு போராட்டக்காரர்களை காட்டில் வேட்டையாடுவது போல் காவலர் சுடலைக்கண்ணு துப்பாக்கியால் சுட்டுள்ளார்.

தூத்துக்குடி காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டதால் 17 ரவுண்டுகள் சுட்டேன் என்று சுடலைக்கண்ணு தெரிவித்தார். ஆனால், 9 ரவுண்டுகள் தான் சுடச் சொன்னதாக தூத்துக்குடி காவல் கண்காணிப்பாளர் கூறியுள்ளார். காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்படி அற்பமான, அசட்டுத் துணிவான துப்பாக்கிச்சூட்டில் காவலர் சுடலைக்கண்ணு ஈடுபட்டுள்ளார். காவலர் சுடலைக்கண்ணு பயன்படுத்திய துப்பாக்கியில் மேலும் தோட்டாக்கள் இருந்திருந்தால் பல விலைமதிப்பற்ற உயிர்களை இழக்க நேரிட்டிருக்கும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெவை வெளிநாடு அழைத்துச் செல்ல மருத்துவர்கள் கூறியும் கேட்காத சசிகலா.. வெளியாக பகீர் காரணம்.

The report regarding the Thoothukudi gun incident was filed in the Tamil Nadu Legislative Assembly

17 பேர் மீது நடவடிக்கை

ஐ ஜி சைலேஷ் குமார் யாதவ், டி ஐ ஜி கபில்குமார் சரத்கர், எஸ் பி மகேந்திரன், துணை எஸ்பி லிங்கத் திருமாறன், ஆய்வாளர் கள் திருமலை, ஹரிஹரன் பார்த்திபன், துணை ஆய்வாளர்கள் சொர்ணமணி,  ரென்னெஸ், முதல் நிலை காவலர்கள் சங்கர், சுடலைக்கண்ணு, சதீஷ்குமார், கண்ணன், தலைமை காவலர் ராஜா, இரண்டாம் நிலை காவலர்கள் ராஜா, தாண்டவமூர்த்தி, காவலர் மதிவாணன் உள்ளிட்ட 17 காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க  ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ் அவர்களின் செயலின்மை அக்கறையின்மை மற்றும் அதிகாரியுடன் இணக்கமின்மையே இந்த சம்பவம் காண்பிக்கிறது. மாவட்ட ஆட்சியர் கடமையிலிருந்து தவறி விட்டார். சாத்தியங்கள் மற்றும் சான்றுகளை ஆராய்ந்ததில் அவர் தன் கடமையிலிருந்து தவறியதும்  ஆரம்பம் முதல் அவரின் அலட்சிய நடவடிக்கைகள் தான் போராட்டம் துப்பாக்கி சூட்டில் முடிவடைய அடித்தளமாக அமைந்துள்ளது என்று ஆணையம் கருதுவதாகவும், இதன் காரணமாக அவர் மீது நடவடிக்கை எடுக்க  முகாந்திரம் உள்ளதாக பரிந்துரை செய்துள்ளது. 

தூத்துக்குடி துப்பாக்கி சூடு அறிக்கையில் ஷாக்கிங் நியூஸ்.. மனதை கலங்க வைக்கும் ரிப்போர்ட்! சிக்கும் 17 பேர்.!

The report regarding the Thoothukudi gun incident was filed in the Tamil Nadu Legislative Assembly

ரூ.50 லட்சம் இழப்பீடு

துப்பாக்கி பிரயோகம் செய்வதற்கு முன்பு சிறப்பு நிர்வாக நடுவரின் உத்தரவு பெற்றதாக ஒரு போலியான நிகழ்வை உருவாக்கி அதற்கு இணக்கமுள்ள துணை வட்டாட்சியர்களை புகுத்தி துப்பாக்கிச்சூடு நடத்தி உள்ளனர். இதன் காரணமாக மூன்று சிறப்பு நடுவர்கள் மீது துறை ரீதியாகவும் வேறு தகுந்த நடவடிக்கையும் எடுக்க ஆணையம் பரிந்துரைக்கிறது. துப்பாக்கி சூடு சம்பவத்தில் இறந்து போனவர்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கும் , அவரவர் தகுதிக்கு ஏற்றவாறு அரசு பணி வழங்கியதை ஆணையம் பாராட்டி உள்ளது. இறந்து போனவர்களின் குடும்பத்திற்கு 50 லட்சம் நிவாரணமாகவும், துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்தவர்களுக்கு 10 லட்சம் வழங்கவும் பரிந்துரை செய்துள்ளது..

இதையும் படியுங்கள்

ஓபிஎஸ்க்கு ஆதரவாக ஸ்டாலின் அரசு..! உண்ணாவிரதப் போராட்டத்திற்கு தேதி குறித்த எடப்பாடி பழனிசாமி

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios