ஜெவை வெளிநாடு அழைத்துச் செல்ல மருத்துவர்கள் கூறியும் கேட்காத சசிகலா.. வெளியான பகீர் காரணம்.
ரிச்சர்ட் பீலே உள்ளிட்ட அயல் நாட்டு மருத்துவர்கள் ஜெயல லிதாவுக்கு ஆஞ்சியோ சிகிச்சை வழக்க வேண்டும் என கூறியும் ஏன் அந்த சிக்கை வழங்க வில்லை என ஆறுமுகசாமி ஆணையம் கேள்வி எழுப்பியுள்ளது.
ரிச்சர்ட் பீலே உள்ளிட்ட அயல் நாட்டு மருத்துவர்கள் ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோ சிகிச்சை வழக்க வேண்டும் என கூறியும் ஏன் அந்த சிக்கை வழங்கவில்லை என ஆறுமுகசாமி ஆணையம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் ஜெ மரணம் விவகாரத்தில் சசிகலா, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் மீது குற்றம் சாட்டுவதை தவிற வேறு முடிவுக்கு வர முடியவில்லை என ஆறுமுகசாமி ஆணையம் குற்றஞ்சாட்டியுள்ளது. தலைமை செயலகத்தில் இன்று ஆறுமுக சாமி ஆணைய அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த பகீர் தகவல் வெளியாகி உள்ளது.
2016 ஆம் ஆண்டு 22 ஆம் தேதி இரவு சுயநினைவற்ற நிலையில் ஜெயலிதா அப்பல்லோ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிக்கைசை வழங்கப்பட்டது. இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடைபெற்று வந்தது. இதில் அந்த ஆணையம் அரசுக்கு 608 பக்க ங்கள் கொண்ட அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. அந்த அறிக்கை அன்று தலைமை செயலகத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் பல அதிர்ச்சி தகவல்களை வெளியாகி உள்ளது.
ஜெயலலிதா மயக்கம் அடைந்த பிறகு நடந்த நிகழ்வுகள் அனைத்தும் மர்மமாக விற்கப்பட்டுள்ளது. சசிகலாவின் உறவினர் ஒருவரால் அமெரிக்காவில் இருந்து அழைத்து வரப்பட்ட மருத்துவர் சமீன் ஷர்மாவை ஏற்பாடு செய்தவர் யார் என்பது தெரியவில்லை. ஜெயலலிதாவை பரிசோதனை செய்து அவர் அவருக்கு இருதய அறுவை சிகிச்சை செய்ய அதாவது ஆஞ்சியோ சிகிச்சை செய்ய பரிந்துரைத்தார். ஆனால் அது கடைசிவரை செய்யப்படவில்லை அது ஏன்.?
இதையும் படியுங்கள்: முதல்வர் ஆலோசனையின் பேரிலேயே செயல்படும் சபாநாயகர்.. திமுகவின் பி டீம் ஓபிஎஸ்.. இறங்கி அடிக்கும் இபிஎஸ்.!
ஜெவை சிகிச்சைக்கு வெளிநாடு அழைத்துச் செல்ல மருத்துவர் ரிச்சர்ட் பீலோ பரிந்துரை செய்தார் ஆனால் அதற்கு சசிகலா தடையாக இருந்துள்ளார் என ஆறுமுகசாமி ஆணையம் குற்றம் சாட்டியுள்ளது. ஜெயலலிதா சிகிச்சையில் இருந்தபோது சசிகலாவின் உறவினர்கள் அப்பல்லோ மருத்துவமனையை ஆக்கிரமித்திருந்தனர். இந்த விவகாரத்தில் சசிகலாவை குற்றம்சாட்டுவதை தவிர வேறு எந்த முடிவுக்கும் வர இயலாது. போயஸ்கார்டனில் மயங்கிய ஜெயலலிதா அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்ட பின்னர் நடந்த விஷயங்களை ரகசியமாக வைக்கப்பட்டன. ஜெயலிதா சிகிச்சையின்போது மருத்துவமனையில் பத்துக்கும் மேற்பட்ட சசிகலா உறவினர்கள் இருந்தனர்.
இதையும் படியுங்கள்: ஜெயலலிதா மரணம்..! சசிகலா, விஜயபாஸ்கர் குற்றம் செய்துள்ளனர்.! சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் தகவல்
ஜெவுக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்படுவதை சசிகலா தடுத்தது ஏன்? இதில் சசிகலா உறவினர் கே. சிவகுமார், அப்போதய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் மீது விசாரணை நடத்தப்பட வேண்டும், ஜெயலலிதா உடல்நலக்குறைவு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து உண்மை நிலை தெரியவில்லை.
2012ஆம் ஆண்டு ஜெயலலிதாவும் சசிகலாவும் மீண்டும் ஒன்று இணைந்தனர். ஆனாலும் அவர்களுக்கு இடையே சுமுகமான உறவு இல்லை, இதனால் சுயநலத்திற்காக ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோ சிகிச்சை மற்றும் வெளிநாடு அழைத்துச் செல்ல சசிகலா தடையாக இருந்தார். ஜெ. சிகிச்சை பெற்ற போது வெளியான மருத்துவ அறிக்கையில் பல்வேறு முரண்பாடுகள் இருந்தது.
ஜெயலலிதா எந்த நேரத்திலும் டிஸ்சார்ஜ் செய்யப்படலாம் என பொய்யான அறிக்கைகள் வெளியிடப்பட்டது. எய்ம்ஸ் மருத்துவ குழு அப்பல்லோவுக்கு ஐந்து முறை வந்தும் சிகிச்சை முறையில் எந்த மாற்றமும் இல்லை. அமெரிக்க மருத்துவர் ஸ்டூவர்ட் ரசூல் பரிந்துரைத்த எந்த சிகிச்சையும் வழங்கவில்லை. இவ்வாறு அடுக்கடுக்காக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.