முதல்வர் ஆலோசனையின் பேரிலேயே செயல்படும் சபாநாயகர்.. திமுகவின் பி டீம் ஓபிஎஸ்.. இறங்கி அடிக்கும் இபிஎஸ்.!
சட்டப்பேரவையில் தொடர் அமளியில் ஈடுபட்ட எடப்பாடி பழனிசாமி தரப்பு அதிமுக ஆதரவு எம்எல்ஏக்களை ஒருநாள் சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டுள்ளார்.
சட்டப்பேரவையில் தொடர் அமளியில் ஈடுபட்ட எடப்பாடி பழனிசாமி தரப்பு அதிமுக ஆதரவு எம்எல்ஏக்களை ஒருநாள் சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டுள்ளார்.
தமிழக சட்டப்பேரவை மழைக்கால கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. சட்டப்பேரவை முதல் நாள் நடவடிக்கையில் மறைந்த உறுப்பினர்கள், தலைவர்களுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டு அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. 2வது நாளாக சட்டப்பேரவை கூட்டம் இன்று காலை 10 மணிக்கு கூடியதும் எதிர்க்கட்சி துணைத்தலைவராக ஓ.பன்னீர்செல்வத்துக்கு பதில் உதயகுமாரை நியமிக்க கோரியதை வலியுறுத்தி இபிஎஸ் ஆதரவு எம்எல்ஏக்கள் பிரச்சனை எழுப்பி அமளி ஈடுபட்டனர்.
இதையும் படிங்க;- ஜெயலலிதா மரணம்..! சசிகலா, விஜயபாஸ்கர் குற்றம் செய்துள்ளனர்.! சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் தகவல்
இதனையடுத்து, அவையின் மாண்பை குலைக்க அனுமதிக்க மாட்டேன் என கூறிய சபாநாயகர் அப்பாவு அவை காவலர்களை கொண்டு இபிஎஸ் ஆதரவு எம்எல்ஏக்களை வெளியேற்ற உத்தரவிட்டார். சட்டப்பேரவையில் இருந்து வெளியேற்றப்பட்ட பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி;- நடுநிலையோடு செயல்படாமல் அரசியல் ரீதியாக சட்டப்பேரவை தலைவர் செயல்படுகிறார். ஸ்டாலினின் ஆலோசனையின் பேரிலேயே செயல்படுகிறார் சபாநாயகர். ஜனநாயகத்தின் மாண்பை குலைத்துவிட்டனர். அதிமுகவை எதிர்கொள்ள முடியாத திராணியில்லாத முதல்வர் ஸ்டாலின், சபாநாயகர் மூலம் கொல்லைப்புறமாக அரசியல் செய்கிறார்.
எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டு உறுப்பினர்களின் கையெழுத்துடன் சபாநாயகரிடம் அளிக்கப்பட்டது. 2 மாதங்களுக்கு முன் அளிக்கப்பட்ட கடிதம் மீது நேற்று வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நீதிமன்ற தீர்ப்பு, பொதுக்குழு தீர்மானம் என அனைத்து ஆதாரங்களையும் சபாநாயகர் மதிக்கவில்லை என இபிஎஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
உறுப்பினர்களால் தேர்வு செய்யப்படுவர்தான் எதிர்க்கட்சித்தலைவர், துணைத்தலைவர் பதவியை வகிக்க முடியும், அதுதான் ஜனநாயகம். இன்று காலை கூட அதிமுக கொறடா தலைமையில் சபாநாயகரை சந்தித்து கோரிக்கை வைத்தோம். திமுகவிற்கு ஆதரவாக எங்கள் கட்சியின் உயர் பொறுப்பாளர் செயல்படுகிறார் என்பது உண்மையாகிவிட்டது. திமுக அரசுக்கு மக்களிடம் எதிர்ப்பு எழுந்துள்ளதால் இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மானத்தை கையில் எடுத்துள்ளனர். தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை விசாரிக்க அருணா ஜெகதீசன் ஆணையம் அமைத்ததே நாங்கள் தான். திமுகவின் பி டீமாக பன்னீர்செல்வம் செயல்பட்டு வருகிறார் என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
இதையும் படிங்க;- எதற்கோ பயந்து இபிஎஸ் தரப்பு அமளி.. சட்டப்பேரவையில் அதிமுகவை கிழித்து தொங்கவிட்ட சபாநாயகர் அப்பாவு.!