ஜெயலலிதா மரணம்..! சசிகலா, விஜயபாஸ்கர் குற்றம் செய்துள்ளனர்.! சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் தகவல்
எய்ம்ஸ் மருத்துவக் குழு 5 முறை அப்பல்லோ வந்திருந்தாலும் ஜெயலலிதாவுக்கு முறையான சிகிச்சை அளிக்கவில்லை என ஆறூமுக சாமி அணையத்தின் அறிக்கையில் தகவல் இடம்பெற்றுள்ளது.
ஜெயலலிதா மரணம்- ஆணையம் அறிக்கை
தமிழக சட்ட பேரவையில் இன்று கேள்வி நேரத்திற்கு பிறகு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்த அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த அறிக்கையில் 2012-ஆம் ஆண்டில் சசிகலா மீண்டும் ஜெயலலிதாவுடன் இணைந்ததில் இருந்தே அவருக்கும் ஜெயலலிதாவுக்கும் நல்ல நட்பு இல்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது. உடல் நலக்குறைவால் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதா மயக்கமான பின்னர் நிகழ்வுகள் அனைத்தும் ரகசியமாக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. ஜெயலலிதா எந்த நேரத்திலும் டிஸ்சார்ஜ் ஆகலாம் என போலியான அறிக்கையை வெளியிடப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சசிகலா குற்றம்செய்தவர்
ஜெயலலிதா மரணத்தில் சசிகலா, கே.எஸ்.சிவகுமார், அப்போதைய சுகாதரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் குற்றம் செய்தவர்களாக முடிவு செய்யப்பட்டு, ஆறுமுகசாமி ஆணையம் விசாரணைக்கு பரிந்துரைப்பதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எய்ம்ஸ் மருத்துவக் குழு 5 முறை அப்பல்லோ வந்திருந்தாலும் ஜெயலலிதாவுக்கு முறையான சிகிச்சை அளிக்கவில்லை என ஆறுமுக சாமி அணையத்தின் அறிக்கையில் தகவல் இடம்பெற்றுள்ளது.
வெளிநாட்டிற்கு ஏன் கொண்டுசெல்லவில்லை
மேலும் ஆறுமுகசாமி அறிக்கையில், சசிகலாவை குற்றம்சாட்டுவது தவிர வேறு எந்த முடிவுக்கும் வர இயலாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோ செய்வது பற்றி டாக்டர் சுனில் சர்மா விளக்கிய பிறகும் ஏன் ஆஞ்சியோ செய்யப்படவில்லை என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. டாக்டர் ரிச்சர்ட் பீலே ஜெயலிதாவை சிகிச்சைக்காக வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்ல தயார் என கூறியிருந்தோம் அது ஏன் நடக்கவில்லை என அந்த அறிக்கையில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்