காக்கை குருவிகளைப் போல சுட்ட 14 போலீஸ்காரனை மட்டுமில்ல, உத்தரவு போட்ட ஆளையும் தூக்குங்க... சீமான்

தூத்துக்குடி படுகொலைக்கு காரணமான காவல்துறையினர் 17 பேர் மீது மட்டுமல்லாது, சுட உத்தரவிட்டவர்கள் யார் என கண்டறிந்து சட்டரீதியான நடவடிக்கை எடுத்து, கொலைவழக்கின் கீழ் கைதுசெய்து சிறைப்படுத்த வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையின் விவரம் பின்வருமாறு:- 

Arrest not only the 14 policemen who shot the people of Tuticorin, but also the person who gave the order... Seaman

தூத்துக்குடி படுகொலைக்கு காரணமான காவல்துறையினர் 17 பேர் மீது மட்டுமல்லாது, சுட உத்தரவிட்டவர்கள் யார் என கண்டறிந்து சட்டரீதியான நடவடிக்கை எடுத்து, கொலைவழக்கின் கீழ் கைதுசெய்து சிறைப்படுத்த வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையின் விவரம் பின்வருமாறு:- 

தூத்துக்குடியிலுள்ள ஸ்டெர்லைட் தாமிர ஆலைக்கெதிராக மண்ணின் மக்கள் நடத்திய மக்கள்திரள் போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தியும், தடியடி நடத்தியுமென 14 உயிர்களைப் பறித்த அரசப்பயங்கரவாத நடவடிக்கையை விசாரிக்க அமைக்கப்பட்ட நீதியரசர் அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையத்தின் இறுதி அறிக்கையானது நம்பிக்கையையும், ஆறுதலையும் தருகிறது. 

Arrest not only the 14 policemen who shot the people of Tuticorin, but also the person who gave the order... Seaman

ஒருநபர் ஆணையத்தின் விசாரணைக்காக நானும் நேர்நின்று, இதில் ஆளும் வர்க்கம் நிகழ்த்திய அநீதிகளையும், அநியாயங்களையும் எடுத்துரைத்த நிலையில், இன்றைக்கு தூத்துக்குடி மக்கள் பக்கமிருக்கும் நியாயத்தை நிலைநாட்டும் விதமாக வெளிவந்திருக்கும் ஆணையத்தின் அறிக்கையை உளப்பூர்வமாக வரவேற்கிறேன்.

இதையும் படியுங்கள்: தூத்துக்குடி துப்பாக்கி சூடு அறிக்கை! மனதை கலங்க வைக்கும் ஷாக்கிங் நியூஸ்! ஒரே காவலர் 17 முறைதுப்பாக்கி சூடு.!

ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடைபெற்ற அறப்போராட்டத்தின் நூறாவது நாளில், பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கிப் பேரணியாய் வந்தபோது, அவர்களை நோக்கித் தடியடியும், துப்பாக்கிச்சூடும் நடத்தி, அடக்குமுறையையும், ஒடுக்குமுறையையும் கட்டவிழ்த்துவிட்டது அன்றைய அதிமுக அரசு.

இதையும் படியுங்கள்: நாடாளுமன்றத் தேர்தலுக்கு திட்டம் தீட்டிய சீமான்..! தனித்துப் போட்டி.. பெண்களுக்கான தொகுதி பங்கீடும் அறிவிப்பு

பேரணி நடைபெற்ற இடத்திற்கு அப்பால் தொலைதூரத்திலுள்ள பகுதியில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டு, அம்மையார் ஜான்சி படுகொலை செய்யப்பட்டார் என்பதும், போராட்டத்திற்கு அடுத்த நாள் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலியானார் என்பதுமான இரு சம்பவங்களே, அன்றைய அரசு திட்டமிட்டு நிகழ்த்தியப் பச்சைப்படுகொலை இதுவென்பதை ஐயத்துக்கு இடமின்றி வெளிச்சமிட்டுக்காட்டுகிறது. 

காவல்துறையினர் போராட்டக்காரர்களின் முட்டிக்குக் கீழே சுடுகிற வகையில் வெள்ளை ஏகாதிபத்திய ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட விதிமுறையையே நாம் ஏற்காதபோது, போராட்டக்காரர்களின் தொண்டை, மார்புப்பகுதிகளைக் குறிவைத்து சுட்டு, காக்கை, குருவியைப் போல தூத்துக்குடி மக்களைக் கொன்றொழித்தக் கொடுங்கோன்மையை எப்படி சகித்துக்கொள்ள முடியும்? 

Arrest not only the 14 policemen who shot the people of Tuticorin, but also the person who gave the order... Seaman

14 உயிர்களைப் பலிகொண்ட படுகொலைகளுக்கு முழுமுதற்பொறுப்பேற்க வேண்டிய காவல்துறை அமைச்சகத்தைத் தன்னகத்தே வைத்திருந்த அன்றைய முதல்வர் ஐயா எடப்பாடி பழனிச்சாமி அவர்கள்தான் ‘தொலைக்காட்சியைப் பார்த்துதான் தெரிந்துகொண்டேன்’எனக்கூறிய பொருந்தா வாதத்தை ஏற்பதாக வைத்துக்கொண்டாலும், போராட்ட நாளுக்கு அடுத்த நாளும் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதே அது எப்படி? அதனையும் தொலைக்காட்சியைப் பார்த்துதான் தெரிந்துகொண்டாரா? வட்டாட்சியர்கள்தான் துப்பாக்கிச்சூட்டுக்கு அனுமதியளித்தார்கள் என்பதை அவரும் வழிமொழிகிறாரா? 

அதிமுக அரசின் குற்றங்களை திமுக அரசு கண்டும் காணாதது போலக் கடந்துசெல்வதும், திமுகவின் குற்றங்களை அதிமுக பேச மறுப்பதுமான நிகழ்வுகள் இரு கட்சிகளுக்கிடையேயும் மறைமுக ஒப்பந்தமிடப்பட்டு, திரைமறைவு பேரம் நடக்கிறதோ? என எண்ணத்தோன்றுகிறது.

ஆகவே, நீதியரசர் அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையத்தின் பரிந்துரைகளை ஏற்று, 17 காவல்துறையினர் மீது மட்டுமல்லாது, துப்பாக்கி சூட்டிற்கு உத்தரவிட்டது யார் என கண்டறிந்து அவர்கள் மீதும் சட்டப்படியான நடவடிக்கை எடுத்து அனைவரையும் கொலைவழக்கின் கீழ் கைதுசெய்து சிறைப்படுத்த முன்வர வேண்டுமெனவும், துப்பாக்கிச்சூட்டுக்குப் பலியானோர் குடும்பத்தினருக்கும், காயமுற்றவர்களுக்கும் துயர்துடைப்புத்தொகை வழங்க வேண்டுமென தமிழக அரசை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios