ஓபிஎஸ்க்கு ஆதரவாக ஸ்டாலின் அரசு..! உண்ணாவிரதப் போராட்டத்திற்கு தேதி குறித்த எடப்பாடி பழனிசாமி

தமிழக சட்ட பேரவையில் எதிர்கட்சி தலைவர் இருக்கை தொடர்பாக ஓபிஎஸ்க்கு ஆதரவாக முடிவெடுத்ததை கண்டித்து நாளை உண்ணாவிரத போராட்டம் நடத்த இபிஎஸ் அணியினர் முடிவுசெய்துள்ளனர்.

Edappadi Palaniswami will hold a hunger strike tomorrow in Chennai to condemn the activities of the DMK government

அதிமுகவில் அதிகார மோதல்

அதிமுகவில் ஏற்பட்டுள்ள ஒற்றை தலைமை மோதல் காரணமாக ஓபிஎஸ்- இபிஎஸ் என பிளவுபட்டுள்ளது. இதனையடுத்து அதிமுகவில் இருந்து ஓபிஎஸ்யை நீக்கிய எடப்பாடி பழனிசாமி அணியினர். சட்டமன்ற எதிர்கட்சி துணை தலைவராக ஆர்.பி உதயகுமாரை நியமித்து அதிரடி காட்டியது. மேலும் சட்ட பேரவை சபாநாயகரிடம் எடப்பாடி பழனிசாமி தரப்பு கடித்த்தையும் அளித்தது. அதில் அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர் செல்வம், வைத்தியலிங்கம், மனோஜ்பாண்டியன் ஆகியோரை நீக்கியதாக தெரிவித்தது. இதற்க்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஓபிஎஸ் தரப்பும் கடிதம் கொடுத்தது. அதிமுகவில் தான் தான் ஒருங்கிணைப்பாளர் எனவும் எந்த முடிவு எடுத்தாலும் தன்னிடம் ஆலோசனை செய்ய வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

ஜெயலலிதா மரணம்..! சசிகலா, விஜயபாஸ்கர் குற்றம் செய்துள்ளனர்.! சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் தகவல்

Edappadi Palaniswami will hold a hunger strike tomorrow in Chennai to condemn the activities of the DMK government

சட்டசபையில் அதிமுக அமளி

இந்தநிலையில் இன்று தமிழக சட்டபேரவை கூட்டமானது நடைபெற்றது. அப்போது எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கும் துணை தலைவர் ஓ.பன்னீர் செல்வத்திற்கும் அரு அருகே இடமானது ஒதுக்கப்பட்டிருந்தது. இதற்க்கு எதிர்ப்பு தெரிவித்த எடப்பாடி அணியினர் சட்டசபைக்குள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கேள்வி நேரத்திற்கு பிறகு பேச வாய்ப்பு தருவதாக சபாநாயகர் தெரிவித்தார். இருந்த போதும் தொடர்ந்து அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டதால் சட்டசபையில் இருந்து இபிஎஸ் மற்றும் அவரது ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களை வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டார். இந்தநிலையில் வெளியே சென்ற எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது, நடுநிலையோடு செயல்படாமல் அரசியல் ரீதியாக சட்டப்பேரவை தலைவர் செயல்படுகிறார். ஸ்டாலினின் ஆலோசனையின் பேரிலேயே செயல்படுகிறார் சபாநாயகர். ஜனநாயகத்தின் மாண்பை குலைத்துவிட்டனர்.

ஜெ. இறந்த தேதியில் கோல்மால்.. அம்பலப்படுத்திய ஆறுமுகசாமி ஆணையம்.. தவறுக்கு மேல் தவறு செய்த சின்னம்மா.?

Edappadi Palaniswami will hold a hunger strike tomorrow in Chennai to condemn the activities of the DMK government

நாளை உண்ணாவிரத போராட்டம்

அதிமுகவை எதிர்கொள்ள முடியாத திராணியில்லாத முதல்வர் ஸ்டாலின், சபாநாயகர் மூலம் கொல்லைப்புறமாக அரசியல் செய்கிறார் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார். இதனிடையே முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு ஒன்றை கொடுத்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், சட்டசபையில் ஜனநாயக படுகொலை நடந்துள்ளதாகவும் இதனை கண்டித்து சபாநாயகரின் நடவடிக்கைகளுக்காக நாளை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதம் இருக்க போவதாகவும்  அதற்கான அனுமதியை காவல் ஆணையரிடம் கேட்டுள்ளதாக தெரிவித்தார்.  

இதையும் படியுங்கள்

ஜெ. இறந்த தேதியில் கோல்மால்.. அம்பலப்படுத்திய ஆறுமுகசாமி ஆணையம்.. தவறுக்கு மேல் தவறு செய்த சின்னம்மா.?

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios