ஓபிஎஸ்யோடு பக்கத்து இருக்கையில் இபிஎஸ்..! சட்டசபையில் கடும் கூச்சல் எழுப்பிய அதிமுக..! வெளியேற்றிய சபாநாயகர்
தமிழக சட்ட பேரவையில் ஓ.பன்னீர் செல்வத்திற்கு எதிர்கட்சி துணை தலைவர் இருக்கை ஒதுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்ட பேரவையில் கூச்சல் எழுப்பிய அதிமுகவினரை சபாநாயகர் அப்பாவு வெளியேற்ற உத்தரவிட்டார்.
சட்டசபையில் அதிமுக கூச்சல்
தமிழக சட்ட பேரவையில் இன்றைய கூட்டம் கேள்வி நேரத்தோடு தொடங்கியது. அப்போது ஓ.பன்னீர் செல்வத்திற்கு எதிர்கட்சி துணை தலைவர் இருக்கை ஒதுக்கப்பட்டதற்கு அதிமுகவினர் பிரச்சனை எழுப்பினர். எதிர்கட்சி தலைவர் இபிஎஸ் பேச முயன்றார். ஆனால் சபாநாயகர் அப்பாவு கேள்வி நேரத்திற்கு பிறகு தங்களுக்கு பேச அனுமதி வழங்கப்படும் என கூறினார். மேலும் கடந்த காலத்தில் ஜானகி அம்மாளுடன் ஏற்பட்ட மோதல் போக்கிலும் இதே போல் பிரச்சனை எழுப்பியதாக கூறினார். அதிமுகவினர் கலகம் செய்ய வந்துள்ளீர்கள். மக்கள் பிரச்சனை பேச மறுக்கின்றீர்கள். என அப்பாவு தெரிவித்தார். இருந்த போதும் தொடர்ந்து இபிஎஸ் தலைமையில் வந்த அதிமுகவினர் தொடர்ந்து கூச்சல் எழுப்பினர்.
தீர்மானத்திற்கு எதிராக அதிமுக செயல்படுகிறதா
மேலும் இந்தி திணிப்பு தொடர்பாக தீர்மானம் வர வுள்ளதாகவும், ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகம் சாமி அறிக்கை இன்று தாக்கல் செய்யப்படவுள்ளதாக சபாநாயகர் அப்பாவு கூறினார். மேலும் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான அறிக்கையையும் தாக்கல் செய்யப்படவுள்ளாத தெரிவித்தார். எனவே இந்த விவாதங்களில் அதிமுகவினர் கலந்து கொள்ளுமாறு வலியுறுத்தினார்.
அதிமுகவினரை வெளியேற்ற உத்தரவு
ஆனால் சபாநாயகர் கோரிக்கையை நிராகரித்த இபிஎஸ் தொடர்ந்து பேச முற்பட்டார். இதனையடுத்து அதிமுக உறுப்பினர்கள் கடும் கூச்சல் எழுப்பிய நிலையில் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டனர். அப்போது கேள்வி நேரத்திற்கு பிறகு பேச வாய்ப்பு தருவதாக தெரிவித்தார். இருந்த போதும் தொடர்ந்து கூச்சல் எழுப்பியதால் சட்டசபையில் இருந்து அதிமுக உறுப்பினர்களை வெளியேற்ற உத்தரவிட்டார். இதனையடுத்து சபையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் அதிமுகவினர் ஈடுபட்டனர். இதனையடுத்து குண்டுகட்டாக இபிஎஸ் மற்றும் அதிமுகவினரை அவை காவலர்கள் வெளியேற்றினர்.
இதையும் படியுங்கள்
அமித்ஷாவிற்கு எதிராக களம் இறங்கிய ஸ்டாலின்...! அதிரடி நடவடிக்கையால் அதிர்ச்சியில் பாஜக