தூத்துக்குடி துப்பாக்கி சூடு அறிக்கையில் ஷாக்கிங் நியூஸ்.. மனதை கலங்க வைக்கும் ரிப்போர்ட்! சிக்கும் 17 பேர்.!
விசாரணை அறிக்கையை முதலமைச்சர் ஸ்டாலினிடம் நீதிபதி அருணா ஜெகதீசன் குழு சமர்பித்தது. இந்நிலையில், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்த நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தின் விசாரணை அறிக்கை சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்த நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தின் விசாரணை அறிக்கை சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ், 17 காவல்துறை அலுவலர்கள், 3 வருவாய்துறை அலுவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க அரசுக்கு அருணா ஜெகதீசன் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி கடந்த 2018ம் ஆண்டு 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். போராட்டத்தின் 100வது நாளில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பிரம்மாண்ட பேரணியை பொதுமக்கள் நடத்தினர். ஆட்சியர் அலுவலகத்தை அடைந்த போது வன்முறையில் ஈடுபட்டதாகக் கூறி போராட்டக்கார்கள் மீது போலீசார் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச் சூட்டில் அப்பாவி பொதுமக்கள் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து, வன்முறை குறித்து விசாரணை நடத்தி அறிக்கை அளிக்குமாறு உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் அப்போதைய அதிமுக அரசு ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைத்து உத்தரவிட்டது.
இந்த ஆணையம் 2018-ம் ஆண்டு ஜூன் 4-ம் தேதி தனது விசாரணையை தொடங்கியது. 4 ஆண்டுகள் தொடர்ச்சியாக நடைபெற்ற விசாரணை, சில மாதங்களுக்கு முன்னர் முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து விசாரணை அறிக்கையை முதலமைச்சர் ஸ்டாலினிடம் நீதிபதி அருணா ஜெகதீசன் குழு சமர்பித்தது. இந்நிலையில், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்த நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தின் விசாரணை அறிக்கை சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.
அதில், துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட தகவலே காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு தெரியாமல் வைக்கப்பட்டிருந்ததாகவும், உரிய உத்தரவுகள் இன்றியே துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாகவும் ஆணையம் குறிப்பிட்டுள்ளது. துப்பாக்கிச்சூட்டின் போது காவலர் சுடலைக்கண்ணு மட்டும் 17 ரவுண்டுகள் சுட்டுள்ளார். தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகம், 3ம் மைல், எஃப்சிஐ ரவுண்டானா, திரேஸ்புறம் போன்ற இடங்களில் சுடலைக்கண்ணு சுட்டுள்ளார். ஒரே போலீசார் மட்டும் 4 இடங்களில் சுட்டதன் மூலம் அவரை அடியாள் போல காவல்துறை பயன்படுத்தியது தெரியவந்துள்ளது. எஃப்சிஐ ரவுண்டானா அருகே சுடலைக்கண்ணு சுட்டபோது எஸ்.பி. மகேந்திரன், எஸ்.பி. அருண்சக்தி குமார் உடனிருந்தனர். போராட்டத்தை கையாள்வதில் ஆட்சியர் வெங்கடேஷ் தொடக்கம் முதலே அலட்சியம் காட்டி வந்துள்ளார்.
துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ், 17 காவல்துறை அலுவலர்கள், 3 வருவாய்துறை அலுவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க அரசுக்கு அருணா ஜெகதீசன் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. கடந்த 2018-ல் தென்மண்டல ஐ.ஜி.ஆக இருந்த சைலேஷ்குமார் யாதவ், திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி ஆக இருந்த கபில்குமார் சர்கார், தூத்துக்குடி எஸ்.பி.யாக இருந்த பி.மகேந்திரன், டி.எஸ்.பி. லிங்கதிருமாறன், 3 ஆய்வாளர்கள், 2 எஸ்.ஐ., ஒரு தலைமை காவலர், 7 காவலர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க ஆணையம் அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. மேலும், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் வாரிசுகளுக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க அருணா ஜெகதீசன் ஆணையம் பரிந்துரைத்துள்ளது. இந்த அறிக்கை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அச்சிடப்பட்டு அனைத்து எம்எல்ஏக்களுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை மீது தமிழக அரசு விரைவில் நடவடிக்கை எடுக்கும் என்று தெரிகிறது.
- Panel reports on Thoothukudi police firing
- Politics News in Tamil
- TN Assembly Session
- Tamilnadu Assembly Winter Session
- Thoothukudi Firing Inquiry report
- Thoothukudi Firing Inquiry report filed
- Thoothukudi firing Inquiry Commission
- Thoothukudi police firing
- Thoothukudi violence
- ThoothukudiGunshot
- aruna jagadeesan commission
- thoothukudi shooting case
- thoothukudi sterlite issue
- thoothukudi sterlite shooting case
- Tamilnadu Politics News