ஆயுத பூஜை மற்றும் விஜயதசமியை முன்னிட்டு சென்னை கோயம்பேடு பூக்கள் சந்தையில் பூக்களின் விலை இரு மடங்கு உயர்ந்துள்ளது. கடந்த வாரம் கிலோ 800 ரூபாய்க்கு விற்கப்பட்ட மல்லிகைப்பூ, தற்போது 1700 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
Ayudha Pooja flower price hike : ஆயுத பூஜை மற்றும் விஜயதசமியை முன்னிட்டு சென்னை கோயம்பேடு பூக்கள் சந்தையில் பூக்கள் விலை இரு மடங்கு உயர்ந்துள்ளது. சென்னை கோயம்பேடு மலர் சந்தைக்கு சென்னை மட்டுமில்லாமல் அருகாமையில் இருக்கக்கூடிய காஞ்சிபுரம் செங்கல்பட்டு திருவள்ளூர் மாவட்டங்களில் இருந்தும் அண்டை மாநிலமான ஆந்திரா கர்நாடகாவில் இருந்து வந்தும் வியாபாரிகள் பூ வாங்கி செல்வது வழக்கமாக உள்ளது. இந்த நிலையில் நாளை ஆயுத பூஜை என்பதால் பூக்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஒரு கிலோ 700 முதல் 800-க்கு விற்பனை செய்யப்பட்ட மல்லிகைப்பூ தற்பொழுது 1200 முதல் 1700 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல மற்ற பூக்களின் விலையும் உயர்ந்துள்ளது.
பூக்களின் விலை உயர்வு
சாமந்தி 130 முதல் 200, முல்லை 800 முதல் 1200,
சம்பங்கி ரூ.300 முதல் ரூ.350 வரை,
கனகாம்பரம் ரூ.1000
செவ்வந்தி ரூ.40 முதல் 400 , வெள்ளை செவ்வந்தி ரூ.170,
செண்டு மல்லி ரூ.100, வாடாமல்லி ரூ.100, கோழிக்கொண்டை ரூ.50 முதல் 80, சாக்லேட் ரோஜா 340, பன்னீர் ரோஜா ரூ.140 முதல் 200, மருகு ரூ.20, மரிக்கொழுந்து ரூ.30, துளசி ரூ.30 என விற்பனையாகிறது.
