Asianet News TamilAsianet News Tamil

மாண்டஸ் புயல் எதிரொலி..! தூத்துக்குடியில் உள்வாங்கியது கடல்..! அதிர்ச்சியில் மீனவர்கள்

மாண்டஸ் புயல் காரணமாக தமிழகத்தில் பல்வேறு கடற்கரையில் கடலின் சீற்றம் அதிகரித்து காணப்படும் நிலையில், தூத்துக்குடியில் 30 மீட்டர் கடல் உள்வாங்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The inundation of the sea in Thoothukudi due to the storm has created a stir among the fishermen
Author
First Published Dec 9, 2022, 2:04 PM IST

கரையை கடக்கும் மாண்டஸ் புயல்

வங்கக் கடலில் உருவான மாண்டஸ் புயல் தற்போது தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் சென்னைக்கு  தென் கிழக்கே 270 கிலோ மீட்டர் தொலைவில் தற்போது  நிலை கொண்டுள்ளது. தீவிர புயலாக இருந்த மாண்டஸ் புயலாக வலுவிலந்துள்ளது. இன்று நள்ளிரவு தொடங்கி புதுச்சேரிக்கும் ஸ்ரீஹரிகோட்டாவிற்கும் இடையே மாமல்லபுரத்தின் அருகில் கரையை கடக்க வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. கரையோரங்களில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். 

மாண்டஸ் புயலால் கடல் சீற்றம்.. மெரினாவில் மாற்றுத்திறனாளிகளுக்காக அமைக்கப்பட்ட சிறப்பு பாதை சேதம்..!

The inundation of the sea in Thoothukudi due to the storm has created a stir among the fishermen

மேலும் கடற்கரையில் நிறுத்திவைக்கப்பட்ட படகுகள் கடல் பகுதியில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டு மாற்று இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று காலை தூத்துக்குடி ரோச் பூங்கா, இனிகோ நகர் பீச் ரோடு கடற்கரை பகுதியில் சுமார் 30 அடி நீளம் கடல் உள்வாங்கியுள்ளது. இதனால் கடலுக்குள் இருந்த பாறைகள் மற்றும் மணல் திட்டுகள் வெளியே தெரிய தொடங்கியது.  இதன் காரணமாக அப்பகுதியை சேர்ந்த மக்கள் கடல் உள்வாங்கியதை ஆர்வமுடன் பார்த்து செல்கின்றனர்.

இதையும் படியுங்கள்

அநாவசியமாக யாரும் வெளியே வராதீங்க.. பொதுமக்களுக்கு போக்குவரத்து காவல்துறை அறிவுறுத்தல்..!

Follow Us:
Download App:
  • android
  • ios