அநாவசியமாக யாரும் வெளியே வராதீங்க.. பொதுமக்களுக்கு போக்குவரத்து காவல்துறை அறிவுறுத்தல்..!

காஞ்சி, செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தேவையின்றி மக்கள் வெளியே வர வேண்டாம் என சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

Warning to motorists..Chennai Traffic Police

மாண்டஸ் புயல் காரணமாக காற்றுடன் கூடிய மழை பெய்து வருவதால் தேவையின்றி மக்கள் வெளியே வர வேண்டாம் என சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. 

சென்னைக்கு தென் கிழக்கே 260 கி.மீ தொலைவிலும், காரைக்காலில் இருந்து 180 கிலோ மீட்டர் தொலைவில் மாண்டஸ் புயல் நிலை கொண்டுள்ளது. மாண்டஸ் புயல் 12 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது. இது தீவிரப் புயலில் இருந்து புயலாக வலுவிழந்துள்ளது. புயலாக வலுவிழந்த நிலையிலேயே புதுச்சேரி- ஸ்ரீஹரிகோட்டா இடையே மாமல்லபுரம் அருகே இன்று நள்ளிரவு அல்லது அதிகாலை கரையைக் கடக்கும் எதிர்பார்க்கப்படுகிறது. புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 65 முதல் 75 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Warning to motorists..Chennai Traffic Police

இதனால், காஞ்சி, செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தேவையின்றி மக்கள் வெளியே வர வேண்டாம் என சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. 

Warning to motorists..Chennai Traffic Police

இதுதொடர்பாக சென்னை போக்குவரத்து காவல்துறை பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. அதில், மாண்டஸ் புயலின் காரணமாக காற்றுடன் கூடிய மழைப் பெய்து வருவதால் வாகன ஓட்டிகள் மிக அவசியமானக் காரணங்களுக்காக மட்டுமே பொதுமக்கள் பயணம் மேற்கொள்ளுமாறு போக்குவரத்துக் காவல்துறைச் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது என்று தெரிவித்துள்ளனர்.

 

அவசியத் தேவைகளுக்கானப் பயணம் மேற்கொள்பவர்கள் இருச்சக்கர வாகனத்தில் பயணம் மேற்கொள்ள நேர்ந்தால் குடை உபயோகிப்பதைத் தவிர்த்து மழை அங்கி அணியலாம்.  மேலும் மழைக்காக ஒதுங்க நேரிட்டால் மரங்கள் பழுதடைந்தக் கட்டிடங்கள் விளம்பர போர்டுகள் மின்மாற்றிகள் ஆகியவற்றின் கீழ் ஒதுங்குவதைத் தவிர்க்கவும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios