மாண்டஸ் புயலால் கடல் சீற்றம்.. மெரினாவில் மாற்றுத்திறனாளிகளுக்காக அமைக்கப்பட்ட சிறப்பு பாதை சேதம்..!
சென்னையில் உள்ள கடற்கரைகளை அனைவருக்கும் ஏற்ற வகையில் மாற்றும் திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகள் மனல் பரப்பில் சென்று கடலை ரசிக்கும் வகையில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு பாதை அமைக்க சென்னை மாநகராட்சி முடிவு திட்டமிட்டது.
சென்னையில் கடல் சீற்றத்தால் மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்காக அமைக்கப்பட்ட சிறப்பு பாதை சேதமடைந்தது. இது தொடர்பாக புகைப்படம் வெளியாகியுள்ளது.
சென்னையில் உள்ள கடற்கரைகளை அனைவருக்கும் ஏற்ற வகையில் மாற்றும் திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகள் மனல் பரப்பில் சென்று கடலை ரசிக்கும் வகையில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு பாதை அமைக்க சென்னை மாநகராட்சி முடிவு திட்டமிட்டது.
இதன்படி கடற்கரையின் மணல் பரப்பில் வீல் சேருடன் சென்று கடல் அலையில் விளையாடும் வகையில் மெரினா கடற்கரையில் சிறப்பு பாதையை 380 மீ நீளம் மற்றும் 3 மீட்டர் அகலத்தில் இந்த பாதை ஒரு கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டது. மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பாதையை கடந்த 27ம் தேதி சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இந்நிலையில், மாண்டஸ் புயல் காரணமாக சென்னை மெரினா கடல் கடுமையான சீற்றத்துடன் காணப்படுகிறது. கடல் சீற்றத்தால், மெரினாவில் மாற்றுத்திறனாளிகளுக்காக அமைக்கப்பட்ட சிறப்பு பாதை சேதம் அடைந்துள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இதனையடுத்து, மாற்றுத்திறனாளிக்கான பாதையை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.