கோவையில் பெய்த கனமழையால் மேட்டுப்பாளையம் அருகே இருக்கும் நடூர் கிராமத்தில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. நான்கு வீடுகள் அடுத்தடுத்து இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் உயிரிழந்துள்ளனர். அதிகாலையில் பெய்த கனமழையில் அங்கிருந்த பங்களா சுற்றுச்சுவர் இடிந்துவிழுந்ததாலேயே உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இடிபாடுகளில் சிக்கி இருந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர் ஆம்புலன்ஸ் மூலமாக சுடுகாட்டிற்கு எடுத்து செல்லப்பட்டு ஒரே நேரத்தில் அனைவரது உடல்களும் தகனம் செய்யப்பட்டது. அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, ஆட்சியர் ராசாமணி, அதிகாரிகள் உள்ளிட்டோர் இறுதிச் சடங்கில் பங்கேற்றனர். 

"