எஸ்.ஜி. சூர்யா உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் மீதான பொய் வழக்குகளை திரும்ப பெற கோரி கரு. நாகராஜன் தமிழக காவல்துறை கடிதம் எழுதி உள்ளார்.

பாஜக மாநில துணை தலைவர் கரு.நாகராஜன் இதுகுறித்து தமிழக காவல்துறை தலைவருக்கு கடிதம் எழுதி உள்ளார். அந்த கடிதத்தில் “ பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி. சூர்யாவை நேற்றிரவு காவல்துறையினர் எந்த முன்னறிவிப்புமின்றி கைது செய்துள்ளனர். இது மிகப்பெரிய சட்ட விரோதமாகும். கடந்த மே 19-ம் தேதி, பென்னாடத்தை சேர்ந்த கம்யூனிஸ்ட் கட்சி கவுன்சிலர் விஸ்வநாதன் வற்புறுத்தலால் பாபு என்ற துப்புரவு தொழிலாளி, கழிவு நீர் கால்வாயை சுத்தப்படுத்த இறங்கிய போது விஷவாயு தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மே 24-ம் தேதி அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்த எஸ்.ஜி. சூர்யா, பாபுவின் மறைவுக்கு கம்யூனிஸ்ட் கட்சி கவுன்சிலர் தான் காரணம் என்பதால், மதுரை எம்.பி சு. வெங்கடேசன், மறைந்த பாபுவுக்காக குரல் கொடுக்கவில்லை, கண்டு கொள்ளவில்லை.” என்று பதிவிட்டிருந்தார். இது சட்டத்திற்கு புறம்பான பதிவே அல்ல. ஆனால் சட்டத்திற்கு புறம்பாக,, காவல்துறை பாஜக மாநில செயலாளரை கைது செய்தது மிகத்தவறு.

இந்த ஒரு திட்டத்தில் மட்டும் தினம் ஒரு கோடி ரூபாய் வட்டி.. நாராயணன் திருப்பதி பகீர் தகவல்..!

பல மோசமான, சட்ட விரோத பதிவுகளை போட்டுள்ள திமுக ஆதரவாளர்கள் மீது பல புகார்கள் கொடுத்தும் கண்டுகொள்ளாத காவல்துறை. நியாயமான கருத்துகளை பதிவிடும் பாஜக நிர்வாகிகள் மீது கைது மற்றும் வழக்கு நடவடிக்கைகள் மேற்கொள்வது மிக மிக தவறானது. எனவே எஸ்.ஜி. சூர்யா உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் மீது தமிழக சைபர் பிரிவு காவல்துறை தொடர்ந்துள்ள பொய் வழக்குகளை திரும்ப பெற வேண்டும் என்று கேட்டுகொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

பெண்ணாடம் தூய்மைப் பணியாளர் உயிரிழப்புக்கு கம்யூனிஸ்டுகளே பொறுப்பு: அண்ணாமலை குற்றச்சாட்டு