இந்த ஒரு திட்டத்தில் மட்டும் தினம் ஒரு கோடி ரூபாய் வட்டி.. நாராயணன் திருப்பதி பகீர் தகவல்..!

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், மின் கட்டணத்தை உயர்த்தி, கோடிக்கணக்கான மின் நுகர்வோரை கடும் துன்பத்தில் ஆழ்த்தியள்ளது தமிழக திராவிட மாடல் அரசு. 

Tamilnadu power generation that pays interest of one crore rupees per day... Narayanan Thirupathy

பல ஆயிரம் கோடிகளை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் இழந்து கொண்டிருக்கிறது என்பது தெரிந்தும் அமைதியாக வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறது திமுக திராவிட மாடல் அரசு என  நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக தமிழக பாஜக மாநிலத் துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில்;- வட சென்னை அனல் மின் நிலையம் - நிலை 3 திட்டத்தில் நான்கு வருடங்களுக்கு மேலாகியும் குறிப்பிட்ட காலத்தில் BGRESL நிறுவனம் ஒப்புக்கொண்ட பணியினை நிறைவேற்ற முடியாததால் 'தினம் ஒரு கோடி' ரூபாய் வட்டி கொடுத்து கொண்டிருக்கிறது தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம்.

இதையும் படிங்க;- கனிமொழி கைதில் கூட இப்படி ஒரு நாடகத்தை பார்க்கவில்லை - நாராயணன் திருப்பதி கருத்து

Tamilnadu power generation that pays interest of one crore rupees per day... Narayanan Thirupathy

ஆனால், இது தெரிந்தும் சென்னை எண்ணுாரில் உள்ள அனல் மின் நிலையம் விரிவாக்கும் திட்டத்தை BGRESL நிறுவனத்திடம் திமுக அரசு அளித்துள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்த செயலை கண்டித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் கடந்த வருடமே எச்சரித்தது நினைவு கூறத்தக்கது. பல ஆயிரம் கோடிகளை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் இழந்து கொண்டிருக்கிறது என்பது தெரிந்தும் அமைதியாக வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறது தமிழக திமுக திராவிட மாடல் அரசு. 

Tamilnadu power generation that pays interest of one crore rupees per day... Narayanan Thirupathy

ஆயிரக்கணக்கான தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் உழைப்பை உறிஞ்சிக்  கொண்டிருக்கிறது திமுக திராவிட மாடல் அரசு. BGRESL நிறுவனத்தின் தவறால், தாமதத்தால், தினம் ஒரு கோடி வட்டி கொடுக்கும் நிலைக்கு ஆளான தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், மின் கட்டணத்தை உயர்த்தி, கோடிக்கணக்கான மின் நுகர்வோரை கடும் துன்பத்தில் ஆழ்த்தியள்ளது தமிழக திராவிட மாடல் அரசு. நிதி நெருக்கடியால், ஒப்புக்கொண்ட காலத்தை தாண்டி, நான்கு வருடங்களுக்கும் மேலாக வட சென்னை அனல் மின் நிலைய திட்டம் நிலை-3 ஐ இயக்கத்திற்கு கொண்டு வர முடியாத BGRESL நிறுவனத்தின் இயலாமையை கருத்தில் கொள்ளாமல் அங்கிருந்து 500 மீட்டர் தொலைவில் உள்ள எண்ணூர் அனல் மின் விரிவாக்கத்திற்கு ஒப்பந்தம் கொடுத்தது ஏன்?

இதையும் படிங்க;-  செந்தில் பாலாஜியை தொடர்ந்து அடுத்து லிஸ்ட்ல இருக்குறது இவர் தான்? ஆளுங்கட்சியை அலறவிடும் அமர் பிரசாத் ரெட்டி.!

Tamilnadu power generation that pays interest of one crore rupees per day... Narayanan Thirupathy

இந்த இரண்டு திட்டங்களும் அமலுக்கு வந்தால் தமிழகத்தில் மின் தட்டுப்பாடு இருக்காது என்பதோடு, கொள் முதல் விலை குறைந்து விடும் என்பதோடு, நுகர்வோருக்கு மின் கட்டணத்தை உயர்த்த வேண்டிய தேவை இருக்காது என்பது உண்மை தானே? மூழ்கும் என்று தெரிந்தும், மூழ்கி கொண்டிருக்கிற கப்பலில் ஏன் பயணிகளை ஏற்ற வேண்டும்? இந்த ஒரு திட்டத்தில் மட்டும் 'தினம் ஒரு கோடி ரூபாய் வட்டி' கொடுத்து கொண்டிருக்கிறது தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் என நாராயணன் திருப்பதி கூறியுள்ளார். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios