மெரினாவில் கருணாநிதிக்கு பேனா நினைவுசின்னம்...! மத்திய அரசிடம் அனுமதி வாங்கிய திமுக.. அதிர்ச்சியில் பாஜக
சென்னை மெரினாவில் கலைஞர் கருணாநிதி நினைவிடத்திற்கு அருகே வங்க கடலில் 360 மீட்டர் உயரத்தில் 80 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட உள்ள பேனா நினைவுச் சின்னத்திற்கு முதல் கட்ட அனுமதி மத்திய அரசு வழங்கி உள்ளது
மெரினாவில் பேனா சின்னம்
முன்னாள் முதலமைச்சரும் மறைந்த தி.மு.க. தலைவருமான கருணாநிதி கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 7ம் தேதி வயது முதிர்வு காரணமாக மரணம் அடைந்தார். அவருக்கு மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிட வளாகத்தில் 2.23 ஏக்கர் பரப்பளவில் ரூ.39 கோடியில் அரசு சார்பில் நினைவிடம் கட்டப்பட்டு வருகிறது. உதயசூரியன் வடிவத்தில் அமைக்கப்படும் நினைவிடத்தின் முகப்பில் பேனா வடிவத்தில் பிரம்மாண்ட தூண் ஒன்றும் அமைக்கப்படுகிறது. கருணாநிதியின் வாழ்க்கை, சிந்தனை குறித்த நவீன ஒளிப்படங்களும் அந்த நினைவிடத்தில் அமைகிறது. இந்தப் பணிகள் நடந்து கொண்டிருக்கக் கூடிய நிலையில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் இலக்கியப் பணி மற்றும் எழுத்தாளுமையை போற்றும் விதமாக அவர் பயன்படுத்திய பேனாவின் மாதிரி வடிவத்தை மெரினா கடலுக்கு நடுவே 80 கோடி மதிப்பீட்டில் 134 அடி உயரத்திற்கு பிரமாண்ட சிலையாக அமைக்க முடிவு எடுக்கப்பட்டது.
மீண்டும் ஒன்று சேர்வதா...? வாய்ப்பே இல்லை... கானல் நீரை போல் கரைந்து போய்விடுவிங்க- இபிஎஸ் ஆவேசம்
அரசியல் கட்சிகள் கண்டனம்
இதற்கு பல்வேறு அரசியில் கட்சிகள் கடும் கண்டம் தெரிவித்து இருந்தன. குறிப்பாக அதிமுக, பாஜகவினர் மக்கள் பணத்தை வீண் செய்வதாக புகார் தெரிவித்தனர். இந்தநிலையில், மாநில கடற்கரை மண்டல மேலாண்மை ஒப்புதல் அளித்த நிலையில் பேனா நினைவு சின்னத்திற்கு கடற்கரை ஒழுங்குமுறை மண்டல அனுமதி கோரும் நடைமுறைகளை பொதுப்பணித்துறை தொடங்கியது. இத்திட்டத்திற்கான சுற்றுசூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வை மேற்கொள்ள ஆய்வு எல்லைகளை கோரி மத்திய சுற்றுசூழல்துறை அமைச்சகத்தின் நிபுணர் மதிப்பீட்டு குழுவிற்கு தமிழக பொதுப்பணித்துறை கடிதம் எழுதியது. இந்தநிலையில் சென்னை மெரினாவில் கலைஞர் கருணாநிதி நினைவிடத்திற்கு அருகே வங்க கடலில் 360 மீட்டர் உயரத்தில் 80 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட உள்ள பேனா நினைவுச் சின்னத்திற்கு முதல் கட்ட அனுமதி மத்திய அரசு வழங்கி உள்ளது.
சுற்றுச்சூழல் அனுமதி பெற நடவடிக்கை
இந்த திட்டத்திற்கு பொதுமக்கள் கருத்து கேட்டு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் சுற்றுச்சூழல் அனுமதியைப் பெற்று அடுத்த கட்ட பணியை தொடங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மெரினாவில் உள்ள கலைஞர் நினைவிடத்தில் இருந்து 650 மீட்டர் கடலில் பாலம் போன்று அமைத்து இந்த பேனா நினைவு சின்னம் கட்டப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது
இதையும் படியுங்கள்