ஸ்டாலின் வீட்டிற்கு செல்லும் அமைச்சர்களின் கமிஷன்.? ஒன்றரை ஆண்டில் 50ஆயிரம் கோடி கொள்ளை- எஸ்.பி.வேலுமணி ஆவேசம்
அதிமுக ஆட்சியில் பத்தாண்டு காலம் எங்கையாவது வசூல் செய்தோமா? இன்று அனைத்து இடங்களிலும் வசூல், மாநகராட்சி, ஊராட்சி அலுவலகம் என எங்கு சென்றாலும் லஞ்சம், எந்த பணியும் நடக்கவில்லை, அமைச்சர்கள் வாங்கும் அத்தனை பணமும் மு.க.ஸ்டாலின் வீட்டிற்கு செல்கிறது என முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி தெரிவித்துள்ளார்.
திமுக குடும்ப சொத்தாக மாறிவிட்டது
அதிமுக சார்பில் மறைந்த முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் கோவை உக்கடம் பகுதியில் நடைபெற்றது .சட்டமன்ற உறுப்பினர்கள் அம்மன் அர்ச்சுணன், தாமோதரன்,ஜெயராமன்,முன்னாள் அமைச்சர் செ.ம.வேலுசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பங்கேற்றார். அப்போது கூட்டத்தில் பேசிய எஸ்.பி.வேலுமணி, திமுகவை உருவாக்கி நாமெல்லாம் மேடையில் பேச காரணம் அறிஞர் அண்ணா தான் என குறிப்பிட்டார். மெட்ராஸ் ஸ்டேட் என்பதை தமிழகமாக மாற்றியதும், சுயமரியாதை திருமணத்தை நடத்தியவரும், இரு மொழி திட்டத்தை கொண்டு வந்து இந்தி எதிர்ப்பு போராட்டத்தை நடத்தியவர் அறிஞர் அண்ணா என தெரிவித்தார். ஒரு கிளை செயலாளராக இருந்த எடப்பாடி பழனிசாமி போன்றவர்கள் மாநில முதல்வராக காரணம் அண்ணா. கருணாநிதி போன்று நன்றி மறப்பவர் அண்ணா அல்ல. திமுகவின் நிலை இன்று குடும்ப சொத்தாக மாறிவிட்டது. அண்ணாவை பற்றி பேச தகுதியில்லாதவர்களாக திமுகவினர் ஆகி விட்டனர் என தெரிவித்தார்.
கொலுசை காட்டி வெற்றி
தமிழகத்தில் திட்டங்கள் அனைத்தையும் எம் ஜி ஆரும் அம்மாவும் கொண்டு வந்தார்கள், ஆனால் அனைத்து திட்டங்களையும் முடக்கிய அரசு திமுக அரசு, கோவை மாவட்டத்தில் பத்து ஆண்டு காலத்தில் எத்தனையோ திட்டங்களை கொண்டு வந்தோம். இன்றுள்ள அமைச்சரையோ, மேயரையோ அல்லது கவுன்சிலரையாவது பார்க்க முடியுமா ? என கேள்வி எழுப்பிய அவர், கவுன்சிலரை போல் நாங்கள் பணியாற்றியதாக தெரிவித்தார். ஸ்மார்ட் சிட்டி திட்டம், ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் என என ஏராளமான திட்டங்களை கொண்டு வந்ததாக கூறினார். இன்று ஆட்சிக்கு வந்து ஒன்றரை ஆண்டு. ஆகி எந்த திட்டமும் திமுக கொண்டுவரவில்லை என தெரிவித்தவர், நடிப்பை மட்டும் வெளிப்படுத்தி மக்களை ஏமாற்றும் முதல்வராக உள்ளார் ஸ்டாலின் உள்ளதாக குறிப்பிட்டார். கொலுசையும் பணத்தையும் காண்பித்து ஓட்டு வாங்கி மின் கட்டணத்தை 12 லிருந்து 53 சதமாக உயர்த்தி விட்டதாகவும் தெரிவாத்தார். கொலுசை காட்டி சென்றவர்கள் இனி அடுத்த தேர்தலுக்கு தான் வருவார்கள் இது தான் திமுக என விமர்சித்தார்.
50 ஆயிரம் கோடி கொள்ளை
உள்ளாட்சி தேர்தலில் வாக்கு பதிவு இயந்திரத்தில் பிராடு செய்து தான் திமுகவினர் வெற்றி பெற்றனர். முடிந்தால் தனி ஏஜெண்டு அமைத்து விசாரணை நடத்துங்கள் பார்க்கலாம் என சவால் விடுத்தார். ஜெயலலிதா மறைவுக்கு பின்னால் ஆட்சியை கவிழ்த்து பின்புற வழியில் ஆட்சியை பிடிக்க ஸ்டாலின் முற்பட்டார். அதை நான் தடுத்தேன். அதிமுக ஆட்சியில் பத்தாண்டு காலம் எங்கையாவது வசூல் செய்தோமா? இன்று அனைத்து இடங்களிலும் வசூல், மாநகராட்சி ஊராட்சி அலுவலகம் என எங்கு சென்றாலும் லஞ்சம், எந்த பணியும் நடக்கவில்லை, அமைச்சர்கள் வாங்கும் அத்தனை பணமும் மு.க.ஸ்டாலின் வீட்டிற்கு செல்கிறது. அமைச்சர்கள் மற்றும் ஸ்டாலின் குடும்பத்தினர் மீது லஞ்ச ஒழிப்பு துறையினர் வழக்கு பதியட்டும். ஒன்றரை ஆண்டில் மக்களை சுரண்டி 50 ஆயிரம் கோடி கொள்ளையடித்து விட்டதாகவும் எஸ்.பி.வேலுமணி குற்றம்சாட்டினார்.
இதையும் படியுங்கள்
மீண்டும் ஒன்று சேர்வதா...? வாய்ப்பே இல்லை... கானல் நீரை போல் கரைந்து போய்விடுவிங்க- இபிஎஸ் ஆவேசம்