Asianet News TamilAsianet News Tamil

மீண்டும் ஒன்று சேர்வதா...? வாய்ப்பே இல்லை... கானல் நீரை போல் கரைந்து போய்விடுவிங்க- இபிஎஸ் ஆவேசம்

கழகத்தை பிளவுப்படுத்த நினைக்கிறவர்கள் கானல் நீர் போல் கரைந்து போய்வார்கள் என அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி தெரிவித்துள்ளார்

EPS has said there is no chance of a reunion
Author
First Published Sep 16, 2022, 8:07 AM IST

அம்மா உணவகத்தை மூடும் திமுக

பேரறிஞர் அண்ணாவின் 114 வது பிறந்த நாளை முன்னிட்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுக்கூட்டம்   வடபழனியில் நடைபெற்றது.   கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி கலந்துக்கொண்டு  உரையாற்றினார்.  அப்போது பேசிய அவர்,  எம்.ஜி.ஆர்.அதிமுகவை தோற்றுவிக்கும் போது அண்ணாவிற்கு பெருமை சேர்க்கும் விதமாக அவரது பெயரிலேயே அண்ணா திமுக என்று பெயர் வைத்தார். அண்ணா பெயரில் இயங்கு வரும் ஒரே கட்சி அதிமுக தான். நாள் தோறும் 63 லட்சம் குழந்தைகளுக்கு சத்துணவு அளித்தவர் எம்.ஜி.ஆர். மலிவு விலையில் உணவு கிடைக்கும் வகையில் அம்மா உணவகத்தை கொண்டு வந்தவர் புரட்சித்தலைவி ஜெயலலிதா. அம்மா உணவக்கத்தை தற்போதைய அரசு மூட நினைத்தால் அதற்கான பதிலடியை மக்கள் தேர்தலில் கொடுப்பார்கள். மக்கள் நிச்சயம் தகுந்த பாடம் புகட்டுவார்கள். மறைந்த பிறகும் மக்கள் மனதில் வாழும் தலைவர்கள் அண்ணா, எம்.ஜி.ஆர்.ஜெயலலிதா  ஆகிய மூவரும் தான் என தெரிவித்தார். 

எடப்பாடியால் கட்சி அழியும்.. அதிமுககாரன் ஓட்டு பாஜகவுக்குதான்.. தலையில் அடித்து அலறும் பண்ருட்டி ராமச்சந்திரன்

EPS has said there is no chance of a reunion

தில்லு முல்லு செய்து ஆட்சியை பிடித்த திமுக

மாணவர்களுக்கு விஞ்ஞான ரீதியில் அறிவுப்பூர்வமான கல்வி கிடைக்க  அதிமுக ஆட்சியில் மடிக்கணினி மாணவர்களுக்கு  வழங்கப்பட்டது. ஆனால் அறிவுப்பூர்வமான கல்வி கிடைத்தால் ஓட்டு கிடைக்காது என்ற ஒரே காரணத்துக்காக மடிக்கணினி வழங்கும் திட்டத்தை திமுக அரசு நிறுத்தி உள்ளது. 3நான் முதல்வராக இருந்த போது  7 சட்டக்கல்லூரிகள், 11 மருத்துவ கல்லூரிகளை கொண்டு வந்தேன் ஆனால் திமுக அரசு 15 மாதம் ஆகியும் ஒரு கல்லூரியையும் கொண்டு வரவில்லை. தமிழகத்தில் பாதி பேருக்கு முதியோர் உதவி தொகையை திமுக அரசு நிறுத்தியுள்ளது. முதியோர் வயிற்றிலும் அடிக்கும் கட்சி தான் திமுக.  அதிமுக மீது எப்போது பார்த்தாலும் பொய் வழக்கை போடுவது தான் திமுக அரசின் முதல் வேலையாக இருக்கிறது. சட்டப்படி ஆட்சி நடத்துகிறோம் என்று சொல்லும் திமுக அரசு திமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் , இப்போதைய அமைச்சர்கள் மீது உள்ள 13 வழக்குகளை நியாப்படி நடந்தாதது ஏன் ? மக்களின் ஆதரவை பெற்று  ஸ்டாலின் முதல்வர் ஆகவில்லை. தில்லு முல்லு செய்து தான் திமுக ஆட்சி வந்துள்ளது. திமுக ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வு திட்டம் கொண்டு வருவோம் என்றார். ஆனால் ஜாக்டோ ஜியோ மாநாட்டில் எந்த அறிவிப்பும் இல்லை. 

அதிமுகவை தட்றேன் தூக்குறேன்.. கூட்டத்தில் மாஸ் காட்டிய சசி.. 2024க்கு ஸ்கெட்ச் போட்ட சின்னம்மா.

EPS has said there is no chance of a reunion

விஞ்ஞான ரீதியில் ஊழல்

கொரோனாவுக்கு பிறகு மெல்ல மெல்ல மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருமானம் ஈட்டி வந்த சூழ்நிலையில் சொத்து வரி, வீட்டு வரி, மின் கட்டணம் ஆகியவற்றை திமுக அரசு உயர்த்தி உள்ளது. என குற்றம் சாட்டினார். தமிழக முதலமைசருக்கு நாட்டை பற்றியும் கவலையில்லை மக்களை பற்றியும் கவலையில்லை.கடுமையான மின் கட்டண உயர்வை திமுக அரசு திரும்ப பெற வேண்டும்.எதில் ஊழல் செய்தாலும் விஞ்ஞான ரீதியில் ஊழல் செய்வதில் திமுகவை சேர்ந்தவர்கள் திறமைசாலி அதிமுகவின் வெகுளியாக இருக்கிறார்கள். அதிமுகவில் தொண்டன் தான் தலைவர். உழைப்பாளியை கேட்டால் தான் AM, PM என்றால் என்னெவ்ன்று தெரியும், வாக்கிங் போவது, சைக்கிளிங் போவது டீ குடிப்பதையும் வேலையாக கொண்ட  தமிழக முதலமைச்சரின் மினிட் டு மினிட் வேலை. அதிமுகவின் தொண்டர்களை தற்போதைய முதல்வர் ஸ்டாலினால் தொட கூட முடியாது. திமுக கட்சி அல்ல கார்ப்பரேட் கம்பெனி, குடும்பம் தான் இயக்குனர், நிர்வாகிகள் பங்குதாரர்கள். திமுக அரசு வரவு செலவை மட்டும் தான் செய்கிறது.மக்கள் நலனில் அக்கறையில்லை.

EPS has said there is no chance of a reunion

கானல் நீர் போல் கரைந்து போவார்கள்

தமிழகத்தில்  போராட்டத்திற்கு அதிகம் அனுமதி கொடுத்த கட்சி அதிமுக. ஆனால் திமுக அரசு ஒரு போராட்டத்திற்கும் அனுமதி கொடுக்க மறுக்கிறார்கள். எதிர்கட்சிகளை திமுக அரசு நசுக்க பார்க்கிறது. ஆனால் ஸ்டாலினின் தந்தையாலேயே ஒடுக்க முடியவில்லை. நான் தற்காலிக தலைவரா, ஸ்டாலின் தான் தற்காலிக தலைவராக இருந்தார். கட்சியில் தலைவர் பதவி கொடுக்க ஸ்டாலினின் தந்தையே ஸ்டாலினை நம்பவில்லை. அதனால் கருணாநிதி உயிரோட இருந்த போது செயல் தலைவர் பதவியை கொடுத்தார்.அப்பாவின் உழைப்பால் தான் ஸ்டாலி முதலமைச்சர், கட்சி தலைவர் ஆகியுள்ளார். நிறைய பேர் சொல்கிறார்கள் ஒன்று சேர்த்து விடுவோம் , ஒற்றுமையுடன் செயல்படுவோம் என்று அது நிச்சயம் நடைபெறாது. இனி அதிமுகவிற்கு தொண்டன் தான் தலைவன் இதில் எந்த மாற்றமும் இல்லை.கொள்ளை அடிப்பதற்கு கட்சி அல்ல நாட்டு மக்களுக்கு நல்லது செய்வதற்கே மட்டுமே கட்சி.கழகத்தை பிளவுப்படுத்த நினைக்கிறவர்கள் கானல் நீர் போல் கரைந்து போவார்கள் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். 

இதையும் படியுங்கள்

அடுத்தவர் சாதனையில் அட்ரஸ் ஒட்டும் திமுக.. திராவிட மாடல் ஆட்சியை டார் டாரா கிழித்த அண்ணாமலை.

Follow Us:
Download App:
  • android
  • ios