கலவரம் செய்தால் தான் பாஜகவை தமிழகத்தில் கால் ஊண்ட செய்ய முடியும்.!இந்து மக்கள் கட்சி நிர்வாகியின் திகில் ஆடியோ

தமிழகத்தில் பாஜக வளரவேண்டும் என்றால் கலவரம் செய்ய வேண்டும் என இந்து முன்னனி மாநில நிர்வாகியும், பாஜக மாவட்ட தலைவரும் பேசிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

The audio of a Hindu Munnani executive saying that BJP can grow in Tamil Nadu only if there is rioting has created a sensation KAK

தமிழகத்தில் பாஜக தோல்வி

நாடாளுமன்ற தேர்தலில் நாடு முழுவதும் பாஜக பரவலாக எம்பி பதவியை கைப்பற்றிய நிலையில், தமிழகத்தில் மட்டும் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 தொகுதிகளிலும் தோல்வி அடைந்துள்ளது. இதனால் பாஜக தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த தேர்தல் தோல்வி தொடர்பாக பாஜக நிர்வாகிகள் தங்கள் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியும், விவாதித்தும் வருகின்றனர். அந்த வகையில், நெல்லை மாவட்ட பாஜக தலைவர் தமிழ்செல்வனும்,  இந்து முன்னணி மாநில நிர்வாகி உடையாரும் பேசிய ஆடியோவானது தற்போது வெளியாகி உள்ளது. அந்த ஆடியோவில்,  40 தொகுதிகளிலும் பாஜக தோல்வியடைந்து விட்டதே மிகவும் வேதனையாக உள்ளது என இந்து முன்னனி நிர்வாகி கூறுகிறார். 

OPS vs EPS : அதிமுகவில் இடம் இல்லை... பாஜகவில் இணையப்போறேனா.? அலறி அடித்து பதில் அளித்த ஓ.பன்னீர்செல்வம்

உட்கட்சி மோதல்

தொடர்ந்து பாஜகவினர் உட்கட்சி வேலை செய்து விட்டார்களா என இந்து முன்னணி நிர்வாகி பாஜக மாவட்ட தலைவரிடம் கேள்வி எழுப்புகிறார். அதற்கு அவர் உண்மைதான் ஒழுங்காக வேலை செய்யவில்லை நயினார் நாகேந்திரன் பணத்தை கட்சிக்காரர்களிடம் கொடுக்கவில்லை.  உறவினர்களிடம் மட்டுமே கொடுத்துள்ளார் இதனால் மற்ற நிர்வாகிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். பல ஆண்டுகளாக கட்சியில் வேலை செய்த வருகிறோம் தற்போது வந்தவர்கள் நம்மை அதிகாரம் செய்தார்களே என அதிருப்தி ஏற்பட்டதாகவும் கூறினார். பணமும் சரியான முறையில் யாருக்கும் சென்று சேரவில்லையென கூறுகிறார்.

கலவரம் செய்தால் தான் பாஜக வளரும்

தொடர்ந்து பேசும் இந்து முன்னனி நிர்வாகி, பாஜக தலைமையில் இருக்கும்  கேசவ விநாயகம் கட்சிக்காக என்ன செய்து விட்டார். கட்சியை வளர்த்தவர்களை எல்லாம் வேலை செய்யவிடவில்லை.  அவரது ஆதரவாளர்களின் மட்டுமே உள்ளனர் எனவே பாஜக தமிழகத்தில் காலூன்ற வேண்டும் என்றால் கலவரம் செய்ய வேண்டும் என தெரிவிக்கிறார். இந்து முன்னணி நிர்வாகியின் இந்த ஆடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios