அப்படியெல்லாம் உடனே டாஸ்மாக் கடைகளை குறைக்க முடியாது! அதுல சிக்கல் இருக்கு! அமைச்சர் முத்துசாமி!
புதுச்சேரியில் இருந்து வரும் எல்லா சாலைகளிலும் 24 மணி நேரமும் போலீஸ் இருக்க முடியாது. காவல் துறை கண்காணிப்பை மீறி புதுச்சேரியில் இருந்து சாராயத்தை வாங்கி வந்துள்ளனர்.
படிப்படியாக மது விலக்கை அமல்படுத்த வேண்டும் என்பதுதான் நமது நோக்கம் என அமைச்சர் முத்துசாமி கூறியுள்ளார்.
ஈரோட்டில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் முத்துசாமி: அண்டை மாநிலத்தில் இருந்து வாங்கி வந்த சாராயத்தை குடித்து 7 பேரும் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. கடுமையான நடவடிக்கை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: School Holiday: பள்ளிகளுக்கு நாளை விடுமுறை! வெளியான முக்கிய அறிவிப்பு! எந்த மாவட்டம் தெரியுமா?
புதுச்சேரியில் இருந்து வரும் எல்லா சாலைகளிலும் 24 மணி நேரமும் போலீஸ் இருக்க முடியாது. காவல் துறை கண்காணிப்பை மீறி புதுச்சேரியில் இருந்து சாராயத்தை வாங்கி வந்துள்ளனர். 500 மதுக்கடைகளை தமிழக அரசு மூடியுள்ளது. இன்னும் 1000 கடைகளை மூடுவதாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. டாஸ்மாக் கடைகளை குறைப்பதை உடனே செய்ய முடியாது.
இதையும் படிங்க: பெண் குழந்தைகளுக்கு 50ஆயிரம்.! உடனே விண்ணப்பியுங்கள்- என்ன தகுதி.? ஆவணங்கள் என்ன வேண்டும்.? ஆட்சியர் அறிவிப்பு
அதில் நடைமுறை சிக்கல் உள்ளது. மக்களை அதற்கு நாம் தயார் செய்ய வேண்டும். மதுப்பழக்கம் உள்ளவர்களை படிப்படியாக குறைக்க வேண்டும். மதுப்பழக்கம் உள்ளவர்களை அதில் இருந்து விடுபட வைக்கும் நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. படிப்படியாக மது விலக்கை அமல்படுத்த வேண்டும் என்பதுதான் நமது நோக்கம். அதற்கான நடவடிக்கையை அரசு எடுக்கும். கள்ளுக்கடை திறப்பது குறித்து தற்போது எதுவும் சொல்ல முடியாது என்று தெரிவித்தார்.